Sunday, 7 April 2024

எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது தெரியுமா?

எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது தெரியுமா?

எப்போதெல்லாம் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்கள். அதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? ஏன் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலமாகவே அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிய முடியும்.

சிறிவர்களிலிருந்து பெரியவர்கள் வரை பொதுவாக எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால்…

ஆசிரியர் தண்டனை கொடுக்கும் போது அல்லது பணியிடத்தில் தண்டனைக்கு உள்ளாகும் போது

அதிகமான வீட்டுப்பாடம் வழங்கப்படும் போது அல்லது பணியிடத்தில் அதிகமான பணிச்சுமை ஏற்படும் போது

பிறந்த நாளுக்கு யாரும் வர மாட்டார்களோ என்று நினைக்கும் போது

உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது

உடன்படிப்பவர்களுடன் அல்லது பழகுபவர்களுடன் பிரச்சனை ஏற்படும் போது

புதிய வீட்டிற்கு மாறும் போது அல்லது புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டி வரும் போது

பள்ளிக்கு புதிய ஆசிரியர் அல்லது அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வரும் போது

பள்ளி கால அட்டவணை மாறும் போது அல்லது பணியிட நேரம் மாற்றத்துக்கு உள்ளாகும் போது

மதிப்பெண்கள் குறைவாக வாங்கும் போது அல்லது பதவி உயர்வுகள் மறுக்கப்படும் போது

தரநிலை அட்டையைப் (ரேங் கார்டு) பெற்றோர்களிடம் காண்பிக்க நேரும் போது அல்லது பணித்திறனின்மை வெளிப்பட்டு மற்றவர்களின் பரிகாசத்துக்கு ஆளாகும் போது

உடன் பிறப்புகளுடன் அல்லது அருகில் குடியிருப்போருடன் சண்டை நேரிடும் போது

பெற்றோர்களுடன் அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சண்டை ஏற்படும் போது

நெருங்கியவர்களின் மரணத்தின் போது

நம்பிக்கையோடு பழகிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மிரட்டும் போது

திருட்டு அல்லது கொலைகளைப் பார்க்கும் போது

பயத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பார்க்கும் போது அல்லது கதைகளைக் கேட்கும் போது

தீவிர நோய்கள் ஏற்படும் போது

பெற்றோர்கள் அல்லது உறவுகள் அல்லது நண்பர்கள் பிரியும் போது

இது போன்ற மனதுக்கு ஒவ்வாத மற்றும் விரும்பாத சூழ்நிலைகள் ஏற்படும் போதெல்லாம் மனதுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படும் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதன் மூலமாக அதிலிருந்து விடுபட முடியும்.

*****

No comments:

Post a Comment