Wednesday 17 April 2024

வாக்களிக்கத் தேவையான அடையாள ஆவணம் எவையெவை என்று தெரியுமா?

வாக்களிக்கத் தேவையான அடையாள ஆவணம் எவையெவை என்று தெரியுமா?

வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், பூத் ஸ்லிப்பை அவர் கையில் வைத்திருந்தாலும் வாக்களிப்பதற்கு அவர் ஓர் அடையாள ஆவணத்தை வாக்குச்சாவடியில் காட்டி தன்னுடைய அடையாளத்தை அவர் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். இதற்காக வாக்காளர் அடையாள அட்டையை ஒருவர் வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள பின்வரும் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். அவையாவன,

Ø 1.கடவுச் சீட்டு எனும் பாஸ்போர்ட்.

Ø 2. ஓட்டுநர் உரிமம் எனும் ட்ரைவிங் லைசென்ஸ்.

Ø 3. புகைப்படத்துடன் கூடிய அரசு ஊழியர் அடையாள அட்டை.

Ø 4. புகைப்படத்துடன் கூடிய எம்பி., அல்லது எம்எல்ஏ. அடையாள அட்டை.

Ø 5. புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்.

Ø 6. வருமான வரி அட்டை எனும் பான் கார்ட்.

Ø 7. NPR அட்டை எனும் NPR ஸ்மார்ட் கார்ட்.

Ø 8. புகைப்படத்துடன் கூடிய நூறு நாள் வேலை அட்டை.

Ø 9. மருத்துவ காப்பீடு அட்டை எனும் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் ஸ்மார்ட் கார்ட்.

Ø 10. மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை.

Ø 11. புகைப்படத்துடன் கூடிய பென்சன் அட்டை.

Ø 12. ஆதார் அட்டை.

வாக்காளர் அடையாள அட்டை உட்பட மேற்படிக் குறிப்பிடப்பட்டுள்ள 12 வகையான அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு வாக்காளர் வாக்களிக்க முடியும்.

மேற்கண்ட அடையாள ஆவணங்கள் இருந்தும் வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் இல்லையென்றால் அவர் வாக்களிக்க முடியாது.

அதே போல வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் மேற்படியான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டாமல் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.

ஆகவே வாக்களிக்கச் செல்லும் வாக்காளர் பூத் ஸ்லிப்போடு, வாக்களிப்பதற்கான மேற்படி அடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது அவசியம் ஆகும்.

வாக்களியுங்கள்!

உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்!

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment