ஏழின் சிறப்பு
எழுவகை
அகத்திணைகள் - குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
எழுவகை
இசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
எழுவகை
சுரங்கள் - ச, ரி, க, ம, ப, த, நி
எழுவகைத்
தாளங்கள் - துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திரிபுடை,
அடதாளம், ஏகதாளம்
கடையெழு
வள்ளல்கள் - அதியன், ஆய், ஓரி, காரி, பாரி, பேகன்
இடையெழு
வள்ளல்கள் - அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன்,
கன்னன், சந்தன்
தலையெழு
வள்ளல்கள் - குமணன் , சகரன் , சகாரன் , செம்பியன் , துந்துமாரி
, நளன் , நிருதி
எழுவகைத் தாதுக்கள் - இரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம்
எழுவகைப் பாதகங்கள் - ஆங்காரம், உலோபம், காமம், பகை, மிகையுணவு, காய்தல், சோம்பல்
எழுவகைப் பிறப்பு - தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, நிற்பன
எழுவகைப் பெண்டிரின் பருவங்கள்
- பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரளம்பெண்
எழுவகை மண்டலங்கள் - வாயு, வருணம், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு
ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது
- ரோம்
ஏழு நாட்கள் வாரத்திற்கு - ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
ஏழு நிறங்களி வானவில்லில் - ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு
ஏழு கண்டங்கள் பூமியில் - ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா,
ஆஸ்திரேலியா
ஏழு சீர்களால் ஆனது - திருக்குறள்
ஏழு என்ற எண்ணே மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண்
ஏழு மலையான் என்று எண்ணின் பெயரால் அழைக்கப்படும் கடவுள் - திருமால்
ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது - ரோம்
ஏழு நாட்களில் இறைவன் உலகைப் படைத்ததாக பைபிள் கூறுகிறது
ஏழு புதிய உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட நாள் - 07.07.2007 - அவையாவன - சிச்சென் இட்சா, மீட்பரான கிறித்து, சீனப்
பெருஞ் சுவர், மச்சு பிச்சு, பெட்ரா, தாஜ் மகால், கொலோசியம்
எழு வகைச் சக்கரங்கள் - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,அனாஹதம், விசுத்தி, ஆக்னா,சகஸ்ராரம்
*****