செப்டம்பர் முதல் வாரம்
பாடத்திட்டம்
வகுப்பு & பாடம் : VIII - கணக்கு
பாடத் தலைப்பு : 5. தகவல் செயலாக்கம்
நிலவரைபடத்தில் வண்ணமிடுதல்
கற்கும் முறை : Active
Learning Methodology
கற்றல் விளைவுகள் :
கணிதக் கருத்துகளைக் குறித்துக் காட்டவும்
மற்றும் உருவகப்படுத்தவும் நிலவரைபட வண்ணமிடுதலின் பங்கை ஆராய்தல், மேலும் வரைபட வண்ணமிடுதல்
மூலம் கணிதத் தீர்வுகளை அறிதல்.
1. அறிமுகம் :
அ)
ஆர்வமூட்டல் :
மாணவர்களிடம் நிலவரைபடத்தில் உலக நாடுகள்
நிலவரைபடம், இந்திய மாநிலங்கள் நிலவரைபடம், தமிழ்நாடு மாவட்டங்கள் நிலவரைபடம் ஆகியவற்றை
உற்றுநோக்கி அதில் வண்ணமிடப்பட்டிருக்கும் தன்மையைக் கவனிக்க செய்தல்.
ஆ)
நினைவு கூர்தல் :
கோலமிட்டு வண்ணமிட்ட அனுபவங்களை நினைவு
கூர்தல்.
இ)
மேலாய்வு :
பக்கம் 137 முதல் 146 வரை
2. புரிதல் :
அ) கருத்துச் செயல்பாடு :
கீழ்காணும் மாயச்சதுரத்தை இரு வண்ணங்களால்
ஒரே வண்ணம்அடுத்தடுத்த வராதவாறு வண்ணமிட செய்தல்:
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் :
1) கொடுக்கப்பட்ட அமைப்பினை மிகக் குறைந்த
எண்ணிகையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு
வண்ணமிடுக.
தீர்வு
:
1) கொடுக்கப்பட்டுள்ள நில வரைபடத்தில்
மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள்
ஒரே வண்ணத்தில் அமையாதவாறு வண்ணமிடுக.
3. குழுவேலை :
அ) ஆசிரியர் செய்யும் கணக்குள் :
1) தமிழ்நாடு மாவட்டங்கள் – நில வரைபடத்தில்
மிகக் குறைந்த வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிட்டுக் காட்டுதல்.
ஆ) மாணவர் செய்யும் கணக்குகள் :
1) இந்தியா
மாநிலங்கள் - நில வரைபடத்தில் மிகக் குறைந்த வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிட்டுக்
காட்டுதல்..
4. வலுவூட்டுதல் :
நிலவரைபட பயிற்சி நூலில் மிகக் குறைந்த வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிட்டுக்
காட்டச் செய்தல்.
5. மதிப்பீடு :
வகுப்பறை மதிப்பீடு :
கொடுக்கப்பட்டுள்ள நில வரைபடத்தில் மிகக்
குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில்
அமையாதவாறு வண்ணமிடுக.
வளரறி மதிப்பீடு (அ) :
உனது மாவட்டத்தின் வட்டங்கள் அடங்கிய நில
வரைபடத்தைக் குறைந்த வண்ணங்களைப் பயன்படுத்தியும், அதிக வண்ணங்களைப் பயன்படுத்தியும்
ஆகிய இரு முறைகளில் வண்ணமிட்டு வருக.
6. குறைதீர்க் கற்றல் :
பாடநூலில் பக்க எண் 146 இல் உள்ள விரைவுத்
துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
7. தொடர்பணி :
பாடநூலில் பக்க
எண் 145 இல் உள்ள பயிற்சி 5.2 இல் கணக்கு எண்கள் : 1, 3
*****
இதை பி.டி.எப். வடிவில் பெற கீழே சொடுக்கவும்
No comments:
Post a Comment