Monday 12 August 2019

ஆறின் சிறப்பு


ஆறின் சிறப்பு
ஆறு என்ற சொல்லுக்கு ஆறு - எண், ஆறு - நதி, ஆறு - ஆறுதல் கொள்ளுதல், ஆறு - வழி, ஆறு - ஒழுக்கம், ஆறு - சூட்டைக் குறைத்தல் எனும் ஆறு வகைப் பொருளைக் கூறலாம்.
அறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
அறுவகை ஆதாரங்கள் - மூலம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி,     ஆக்ஞை
அறுவகை உட்பகைகள் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்
அறுவகைச் சாத்திரங்கள் - வேதாந்தம், வைசேடிகம், பாட்டம், பிரபாகரம்,        பூர்வமீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை
அறுவகை சிறுபொழுதுகள் - மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு
அறுவகை பெரும்பொழுதுகள் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,            முதுவேனில்
அறுவகை அரசரின் அங்கங்கள் - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
அறுவகை ஆடுகள் - காராடு, செம்மறியாடு, கம்பளியாடு, மலையாடு, துருவாடு,         பள்ளையாடு
*****

No comments:

Post a Comment