Sunday, 11 August 2019

ஐந்தின் சிறப்பு


ஐந்தின் சிறப்பு
ஐவகை நிலங்கள் & ஐந்திணைகள் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐவகைக் கருப்பொருள்கள் - புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்
ஐம்பூதங்கள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
ஐம்பொறிகள் - கண், காது, மூக்கு, நாக்கு, தோல்
ஐம்புலன்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
தமிழின் ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐம்பெருங் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,   வளையாபதி, குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள் - உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர           காவியம், சூளாமணி, நீலிகேசி
தமிழர்களின் ஐவகை உலோகங்கள் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்
சிலப்பதிகாரம் சொல்லும் ஐவகை மன்றங்கள் - வெள்ளிடை மன்றம், இலஞ்சி             மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம்
ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதி, தூதுவர், சாரணர்
ஐவகைக் கூந்தல் அலங்காரம் - முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை
ஐவர் எனும் பாண்டவர்கள் - தருமர், அருச்சுனர், வீமர், நகுலர், சகாதேவர்
ஐவகை உரையிலக்கணம் - பதம், பதப்பொருள், வாக்கியம், வினா, விடை
ஐவகை சிவனது தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்.
ஐவகை ரத்தினங்கள் - வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
ஐவகை தந்திரங்கள் - நட்பைப் பிரித்தல், நட்பைப் பெறுதல், அடுத்துக் கெடுத்தல், பெற்றதை இழத்தல், ஆராயாமல் செய்தல்
ஐவகை வர்ணங்கள் - வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.
ஐவகை கன்னியர்கள் - அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.
ஐவகை ஜீவநதிகள் - சீலம், சினாப், சட்லெஜ், ராவி, பியாஸ்   
ஐவகை கோசங்கள் -  அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.   
ஐவகை உற்சவங்கள் –   நித்ய உற்சவம்,வார உற்சவம், மாதம் இருமுறை உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.
ஐவகைப் புராணங்கள் - தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்
ஐவகை மூர்த்திகள்  - விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.       
பஞ்சாமிர்தம் என்பது - பால். தயிர், சர்க்கரை,நெய்,தேன் சேர்ந்தது
பஞ்சாங்கம் என்பது - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என ஐவகைக்             காட்டுவது
பஞ்ச கவ்யம் என்பது - பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என ஐவகைச்    சேர்ந்தது
வாழ்வியல் சொற்களான,
            இல்லறம், துறவறம், திருமணம், பிள்ளைகள், மகிழ்ச்சி, புண்ணியம், சொர்க்கம் என்பன ஐந்து எழுத்துகளால் ஆனது என்பது கவனிக்க தக்கது.
*****

2 comments:

  1. thanks for your help to improve our studies
    thanks to all
    enjoy this

    ReplyDelete
  2. Nice. Further studies on other numbers?

    ReplyDelete