ஆகஸ்ட் நான்காம் வாரம்
பாடத்திட்டம்
வகுப்பு & பாடம் : VIII - கணக்கு
பாடத் தலைப்பு : 5. தகவல் செயலாக்கம்
எண்ணுதலில் அடிப்படைக் கொள்கைகள்
கற்கும் முறை : Active
Learning Methodology
கற்றல் விளைவுகள் :
கற்றல் விளைவுகள் :
வெவ்வேறு எண்ணிக்கையிலான பொருட்களின்
அனைத்து சாத்தியமான வரிசைகளைத் தீர்மானித்து அவ்வரிசைகளின் பட்டியல் மற்றும் எண்ணல்
கொள்கைகளை விவரிக்கும் திறன் பெறுதல்:
1. அறிமுகம் :
அ)
ஆர்வமூட்டல் :
ஒரு நீல பந்து, ஒரு சிவப்பு
பந்து, ஒரு பச்சை பந்தை வெவ்வேறு வழிகளில்
நீலம் - சிவப்பு - பச்சை
நீலம் - பச்சை - சிவப்பு
சிவப்பு - நீலம் - பச்சை
சிவப்பு - பச்சை - நீலம்
பச்சை - நீலம் - சிவப்பு
பச்சை - சிவப்பு - நீலம்
என ஆறு வழிகளில் செய்முறையாக பந்துகளைக் கொண்டு அமைத்துக் காட்டுதல்.
ஆ)
நினைவு கூர்தல் :
ஏழாம் வகுப்பில் கற்ற வடிவங்களை
வரிசைப்படுத்துதல், மாயச்சதுரம் அமைத்தல்,
மரவுரு படங்கள் ஆகியவற்றை நினைவு கூர்தல்.
இ)
மேலாய்வு :
பக்கம் 127 முதல் 136 வரை
2. புரிதல் :
அ) கருத்துச் செயல்பாடு :
1, 3 மற்றும் 5 என்ற எண்களை ஒரு முறை மட்டும்
பயன்படுத்தி அமையக்கூடிய மூவிலக்க எண்ணைக்
கண்டுபிடிக்கும் செயல்முறை :
ஆக மொத்தம் மூவிலக்க எண்ணைக் கண்டுபிடிக்கும் செயல்முறைக்கான வாய்ப்புகள்
= 6
இச்செயல்முறைக்கான
காணொலியைப் பெறுவதற்கான இணைப்பு
https://youtu.be/Edh6OdWydjw
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் :
1) நீங்கள் பனிக்கூழ் அல்லது இனிப்பு ரொட்டி
வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில் சாக்லேட், ஸ்டாபெர்ரி மற்றும்
வெண்ணிலா என 3 வகைகளும், இனிப்பு ரொட்டியில் ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2 வகைகளும்
உள்ளன எனில் நீங்கள் ஒரு பனிக்கூழோ அல்லது ஒரு இனிப்பு ரொட்டியோ வாங்குவதற்கு எத்தனை
விதமான வாய்ப்புகள் உள்ளன?
பனிக்கூழில் 3 வகைகள் உள்ளன. அதில் ஒரு
வகையான பனிக்கூழ் வாங்குவதற்கு 3 வாய்ப்புகள் உள்ளன.
இனிப்பு ரொட்டியில் 2 வகைகள் உள்ளன. அதில்
ஒரு வகையான ரொட்டியை வாங்கவதற்கு 2 வாய்ப்புகள் உள்ளன.
ஒரு பனிக்கூழ் வகையோ அல்லது ஒரு இனிப்பு
ரொட்டி வகையோ வாங்குவதற்கு பனிக்கூழ் வகையில் 3 வாய்ப்புகள் அல்லது இனிப்பு ரொட்டி வகையில் 2 வாய்ப்புகள் ஆக 5 விதமான வாய்ப்புகள்
உள்ளன.
2) மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச்
செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில்
ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க
ஆசிரியருக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளன.
ஆறாம் வகுப்பில் 10 மாணவர்களைத் தேர்ந்தெடுக்க
10 வாய்ப்புகள்
ஏழாம் வகுப்பில் 15 மாணவர்களைத் தேர்ந்தெடுக்க
15 வாய்ப்புகள்
எட்டாம் வகுப்பில் 20 மாணவர்களைத் தேர்ந்தெடுக்க
20 வாய்ப்புகள்.
ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாணவர் வீதம்
மூன்று மாணவர்களைத் தெர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் = 10 × 15 × 20
=
3000 வாய்ப்புகள்
இ) மாணவர் செய்யும் கணக்குகள் :
1) பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா
போட்டிக்கு பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 11 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள்
கொண்ட குழுவில் அவர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க எத்தனை வாய்ப்புகள் உள்ளன?
2) பிரவீன் தனது பிறந்த நாளுக்காக 3 மேல்
சட்டைகள், 2 முழுக்கால் சட்டைகள் மற்றும் 3 ஜோடி காலணிகள் வாங்கினான். அவன் தன்னுடைய
பிறந்த நாளன்று எத்தனை விதமான வழிகளில் தான் வாங்கிய புதிய உடைமைகளை எத்தனை விதமான
வழிகளில் அணிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கணக்கிடுக.
3. குழுவேலை :
அ) ஆசிரியர் செய்யும் கணக்குள் :
1) ஒரு நகைக் கடையில் உள்ள பாதுகாப்பு
பெட்டகத்திற்கான திறவுகோல் எண் 4 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு
ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களைக் கொண்டு உருவாக்க வேண்டுமெனில்
ஒரு தனித்துவமான திறவுகோல் அமைக்க எத்தனை வாய்ப்புகள் உள்ளன?
நான்கு இலக்கம் கொண்ட தனித்துவமான எண்ணை
உருவாக்க ஒவ்வொரு இலக்கத்திற்கும் பத்து வாய்ப்புகள் உள்ளன.
ஆக நான்கு இலக்கங்களை உருவாக்க ஒவ்வொரு
இலக்கத்துக்கும் பத்து வாய்ப்புகள் வீதம் 10 × 10 × 10 × 10 = 10,000 வாய்ப்புகள்
ஆ) மாணவர் செய்யும் கணக்குகள் :
1) ஆறு
உருக்கள் கொண்ட ஒரு கடவுச்சொல்லில் முதல் இரு உருக்கள் ஒவ்வொன்றும் 26 ஆங்கில எழுத்துகளில்
ஏதேனும் ஒரு எழுத்தாகவும், மூன்றாவது உரு @, #, ~, %, &, _, +, *, ^, / என்ற
10 சிறப்பு உருக்களில் ஏதேனும் ஒன்றாகவும் மற்றும் அடுத்து வரும் 3 உருக்கள் 0 முதல்
9 வரையிலான எண்களாகவும் அமைந்துள்ளது எனில் அத்தனித்துவமான ஒரு கடவுச்சொல்லை உருவாக்க
எத்தனை வாய்ப்புகள் உள்ளன எனக் கண்டறிக.
4. வலுவூட்டுதல் :
வெவ்வேறு வண்ணமுள்ள 2 பந்துகளை வெவ்வேறு
விதமாக வரிசைப்படுத்துதல்.
வெவ்வேறு வண்ணமுள்ள 3 பந்துகளை வெவ்வேறு
விதமாக வரிசைப்படுத்துதல்.
வெவ்வேறு வண்ணமுள்ள 4 பந்துகளை வெவ்வேறு
விதமாக வரிசைப்படுத்துதல்.
வெவ்வேறு வண்ணமுள்ள 5 பந்துகளை வெவ்வேறு
விதமாக வரிசைப்படுத்துதல்.
அவ்வண்ணம் வரிசைப்படுத்தி அதற்கான வாய்ப்புகளைப்
பட்டியலிடுதல்.
5. மதிப்பீடு :
வகுப்பறை மதிப்பீடு :
1) இரண்டு நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்
போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?
2) மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்
போது கிடைக்கும் வித விதமான வாய்ப்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுக.
3) 7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க
எண்கள் எத்தனை உள்ளன?
4) ஒவ்வொரு வகுப்பிலும் தலா 12 மாணவர்கள்
வீதம் படிக்கும் ஐந்து வகுப்புகள் உள்ள பள்ளியில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுப்பதற்கான
வாய்ப்புகள் எத்தனை?
5) பத்து வகையான மூக்கு கண்ணாடியையும்,
7 வகையான கைகடிகாரங்களையும் ஜோடியாக அணிந்து செல்வதற்கான வெவ்வேறு விதமான வாய்ப்புகள்
எத்தனை?
வளரறி மதிப்பீடு (அ) :
1, 3, 5, 7 ஆகிய எண்களைப் பயன்படுத்தி
அமையக்கூடிய அனைத்து வகையிலான வாய்ப்புகளுடன் கூடிய நான்கிலக்க எண்களை உருவாக்கும்
வழிமுறைப் படம் வரைந்து பட்டிலியட்டு வருக.
6. குறைதீர்க் கற்றல் :
பாடநூலில் பக்க எண் 127 இல் உள்ள விரைவுத்
துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
7. தொடர்பணி :
பாடநூலில் பக்க
எண் 136 இல் உள்ள பயிற்சி 5.1 இல் கணக்கு எண்கள் : 4, 5
No comments:
Post a Comment