Friday, 9 August 2019

மூன்றின் சிறப்பு



மூன்றின் சிறப்பு
மூன்று           - எண்களில் எண்ணின் பொருளுக்கேற்ப மூன்று எழுத்தால் வரும் மூன்றெழுத்துச் சொல் - 3
தமிழ்              - மூன்றெழுத்துச் சொல்
முத்தமிழ்      - இயல், இசை, நாடகம்
மூவேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர்
மூவுலகம்     - பூலோகம், பரலோகம், பாதாளலோகம்
முக்காலம்    - இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்
முக்குணம்    - சாத்வீக குணம், இரசோ குணம், தாமச குணம்          
முக்குற்றம்   - காமம், வெகுளி, மயக்கம்
முச்சக்தி         - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி
முச்சுடர்        - சூரியன், சந்திரன், அக்கினி
முத்தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்
முந்நூல்         - முதல் நூல், வழி நூல், சார்பு நூல்
முப்பிணி      - வாதம், பித்தம், கபம்
மும்மலம்     - ஆணவம், கன்மம், மாயை
முக்கனி         - மா, பலா, வாழை
மும்மொழி  - மெய் கூறல், புகழ் கூறல், பழி கூறல்
முக்கடவுள்  - பிரம்மன், விஷ்ணு, சிவன்
வாழ்வியலின் முக்கிய சொற்களான
            அறம், உயிர், உடல், உரிமை, கடமை, புகழ், பொறுமை, மூச்சு, பேச்சு, வாக்கு, உண்மை, நன்மை, வன்மை, பெருமை, குடிமை, மனைவி, மகன், மகள், உறவு, அழகு, மேன்மை, நலம், வளம், பலம், வாழ்க போன்ற சொற்கள் மூன்று எழுத்துகளால் அமையப் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
*****

No comments:

Post a Comment