Saturday, 10 August 2019

நான்கின் சிறப்பு


நான்கின் சிறப்பு
நான்கு திசைகள் - வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு
நால்வகை உபாயங்கள் - சாமம், தானம், பேதம், தண்டம்
நால்வகை உண்ணும் முறைகள்  - உண்டல், தின்னல், நக்கல், பருகல்
நால்வகை உரைகள்           - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை
நால்வகைப் படைகள் - தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை
நால்வகைச் சொற்கள் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
நால்வகைப் பாக்கள் - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
நால்வகைப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு
நால்வகைப் பெண்டிரின் குணங்கள் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நான்கு யுகங்கள் - கிரதம், திரேதம், துவாபரம், கலி
நால் வகைக் கணக்குகள் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்
            இந்த நான்கு என்ற எண் வாழ்விலும் சிறப்பாகக் கருதப்பட்டு வாழ்ந்தாலும், செத்தாலும், நல்லதுக்கும், கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும் என்ற கருத்தாக்கத்தையும் உருவாக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
            பிறப்பு, இறப்பு, சிறப்பு, தெய்வம், இதயம், உயர்வு, உலகம், ஊக்கம், முயற்சி, ஆக்கம், செல்வம், இயற்கை, செழிப்பு, உழைப்பு போன்ற வாழ்வியலோடு தொடர்புடைய சொற்கள் நான்கு எழுத்துகளால் ஆகியுள்ளது எண்ணத்தக்கது.
*****

3 comments: