நா பிறழ் மற்றும் நா நெகிழ் பயிற்சிக்கான சொற்றொடர்கள்
1. |
ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி. கிழ நரி முதுகில
ஒரு பிடி நரை முடி. |
2. |
யார் தைத்த சட்டை? இது எங்கள் தாத்தா தைத்த
சட்டை. |
3. |
ஏழைக் கிழவர் வாழைப்பழத் தோல் வழுக்கிச்
சறுக்கி விழுந்தார். |
4. |
ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை
குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள். |
5. |
கொக்கு நெட்டைக் கொக்கு. நெட்டைக் கொக்கு
இட்ட முட்டை கட்டை முட்டை. |
6. |
புட்டும் புதுப்புட்டு. தட்டும் புதுத்
தட்டு. புட்டைக் கொட்டி விட்டுத் தட்டைத் தா. |
7. |
கரடி கருங்கரடி. கரடி பொடனி கரும் பொடனி. |
8. |
அவனும் அவளும் அவலும் தெள்ளு மாவும் தின்றார்கள்
|
9. |
மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை ஆகப் பதினான்கு
ஓலை. |
10. |
பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது |
11. |
அவளை
அவலளக்கச் சொன்னேன், அவளும் அவலளக்கவில்லை. இவளை அவலளக்கச் சொன்னேன், இவளும் அவலளக்கவில்லை.
அவளும் இவளும் அவலளக்காவிட்டால், எவள் அவலளப்பாள்? |
12. |
வியாழக்கிழமை
ஆழமான குழியில் வாழைப்பழம் அழுகிக் கொழுகொழுத்து விழுவதைக் கண்ட குழந்தைகள் அழத்
தொடங்கினர். |
13. |
தோவாழாக்கோட்டையிலே
மூவாழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்தேழு வாழைப்பழம்! |
14. |
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்குக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா. |
15. |
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது. |
16. |
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. |