Monday, 1 November 2021

நெல்லி மரம் சொல்லி வைத்தாற் போல் காய்க்க…

நெல்லி மரம் சொல்லி வைத்தாற் போல் காய்க்க…

            நெல்லி மரம் காய்க்காத பருவம் என்று எதுவுமில்லை. எல்லா பருவத்திலும் காய்க்கும் அற்புத மரம் நெல்லியாகும். ஔவைப் பிராட்டிக்கு அதியமான் தந்தது ஆயுளை வளர்க்கும் நெல்லிக் கனியாகும். தினம் ஒரு நெல்லியைச் சாப்பிட்டால் மூப்பு விரைவில் அண்டாது. உங்கள் வீட்டில் வைத்திருக்கும் நெல்லி மரம் வைத்து வருடங்கள் ஆகியம் காய்க்கவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதல் காரணம் மண் வளக் குறைவு. இதனை இயற்கை எரு, பஞ்சகவ்யம்போன்ற முறைகளால் மேம்படுத்தி நெல்லி மரத்தைக் காய்க்க செய்யலாம். இரண்டாவது காரணம் ஒரே வகையிலான நெல்லி மரங்களால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட வாய்ப்பில்லாமல் போகலாம். இதனை தவிர்க்க இரண்டு மூன்று வகை நெல்லி மரங்கள் இருக்குமாறு தோட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment