Friday 31 December 2021

நா பிறழ் மற்றும் நா நெகிழ் பயிற்சிக்கான சொற்றொடர்கள்

நா பிறழ் மற்றும் நா நெகிழ் பயிற்சிக்கான சொற்றொடர்கள்

1.

ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி. கிழ நரி முதுகில ஒரு பிடி நரை முடி.

2.

யார் தைத்த சட்டை? இது எங்கள் தாத்தா தைத்த சட்டை.

3.

ஏழைக் கிழவர் வாழைப்பழத் தோல் வழுக்கிச் சறுக்கி விழுந்தார்.

4.

ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.

5.

கொக்கு நெட்டைக் கொக்கு. நெட்டைக் கொக்கு இட்ட முட்டை கட்டை முட்டை.

6.

புட்டும் புதுப்புட்டு. தட்டும் புதுத் தட்டு. புட்டைக் கொட்டி விட்டுத் தட்டைத் தா.

7.

கரடி கருங்கரடி. கரடி பொடனி கரும் பொடனி.

8.

அவனும் அவளும் அவலும் தெள்ளு மாவும் தின்றார்கள்

9.

மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை ஆகப் பதினான்கு ஓலை.

10.

பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது

11.

அவளை அவலளக்கச் சொன்னேன், அவளும் அவலளக்கவில்லை. இவளை அவலளக்கச் சொன்னேன், இவளும் அவலளக்கவில்லை. அவளும் இவளும் அவலளக்காவிட்டால், எவள் அவலளப்பாள்?

12.

வியாழக்கிழமை ஆழமான குழியில் வாழைப்பழம் அழுகிக் கொழுகொழுத்து விழுவதைக் கண்ட குழந்தைகள் அழத் தொடங்கினர்.

13.

தோவாழாக்கோட்டையிலே மூவாழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்தேழு வாழைப்பழம்!

14.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்குக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா.

15.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது.

16.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

மழலையர், தொடக்க, நடுநிலை வகுப்புகள் ஜன 10, 2022 வரை செயல்பட அனுமதி இல்லை – அரசின் அறிவிப்பு

மழலையர்,  தொடக்க, நடுநிலை வகுப்புகள் ஜன 10, 2022 வரை செயல்பட அனுமதி இல்லை – அரசின் அறிவிப்பு

            மழலையர், தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகள் 10.01.2022 வரை செயல்பட அனுமதி இல்லை என்பது குறித்தும் பிற பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அரசு வெளியிட்டுள்ள 7 பக்க செய்திக் குறிப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

பணி மாறுதல் விண்ணப்பம் (Transfer Application)

பணி மாறுதல் விண்ணப்பம் (Transfer Application)

            2022 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் பணி மாறுதலுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

ல / ழ / ள – நாபிறழ் பயிற்சி

ல / ழ / ளநாபிறழ் பயிற்சி

ல - ழ - ள நாபிறழ் பயிற்சிக்குப் பயன்படும் சொற்றொடர்கள்

அவளை அவலளக்கச் சொன்னேன், அவளும் அவலளக்கவில்லை. இவளை அவலளக்கச் சொன்னேன், இவளும் அவலளக்கவில்லை. அவளும் இவளும் அவலளக்காவிட்டால், எவள் அவலளப்பாள்?

வியாழக்கிழமை ஆழமான குழியில் வாழைப்பழம் அழுகிக் கொழுகொழுத்து விழுவதைக் கண்ட குழந்தைகள் அழத்தொடங்கினர்.

தோவாழாக்கோட்டையிலே மூவாழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்தேழு வாழைப்பழம்!

Spouse Certificate

Spouse Certificate

            பணி மாறுதலுக்குத் தேவைப்படும் Spouse Certificate ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Thursday 30 December 2021

கொற்றவை - படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

கொற்றவை

தமிழர்களின் பழந்தெய்வமாக அறியப்படும் கடவுள் கொற்றவை ஆவாள். அவளைப் பழையோள் என்றும் இலக்கியங்கள் குறிப்பிடும்..

பாலை நிலத் தெய்வமாக அறியப்பட்டாலும் அனைத்து திணை மக்களின் வெற்றிக் கடவுளாய்க் கொற்றவை போற்றப்படுகிறாள்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் கொற்றவை நிலை “மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே” என்று சுட்டப்படுகிறது. போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றிக்காக  கொற்றவையை வணங்கிச் செல்லும் நிலையே கொற்றவை நிலை ஆகும்.

அடர்ந்த காட்டில் உறைபவள் என்று கொற்றவைக் குறித்து "ஓங்கு புகழ் கானமர் செல்வி" என அகநானூறு குறிப்பிடுகிறது.

குறுந்தொகை கொற்றவையை "விரல் கெழு சூலி" என்கிறது.

கலித்தொகை கொற்றவையை "பெருங்காட்டு கொற்றவை" என்கிறது.

பரிபாடல்     "நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவை கோலங்கொண்டு" என்று கூறுகிறது.

திருமுருகாற்றுப்படை “கொற்றவை சிறுவ” எனக் கூறுவதன் மூலம் முருகனின் தாய் கொற்றவை என்கிறது. மேலும் “பழையோள் குழவி” என்றும் கொற்றவையின் பழமையைப் போற்றுகிறது. “வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ விழையணி சிறப்பிற் பழையோள் குழவி” என்பது திருமுருகாற்றுப்படையின் வரிகள்.

பெரும்பாணாற்றுப் படையானது சூரனை வதம் செய்த  முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும்  கூத்தையும் அழகையும் உடைய செல்வி கொற்றவை என்பதை “கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி” எனும் வரிகளால் போற்றுகிறது.

சிலப்பதிகாரத்தில் கொற்றவைக் குறித்து ஏராளமான செய்திகள் காணப்படுகின்றன. மதுரைக்கு  வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் தங்குவதே  ஒரு கொற்றவை கோவிலில்தான். “விழிநுதற் குமரி, விண்ணோர் பாவைமையறு சிறப்பின் வான நாடி ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு  என்" எனும் வரிகளால் அச்செய்தியை அறியலாம்.

கொற்றவையின் தோற்றம், வழிபாடு, பெருமை,சிறப்பு குறித்துச் சிலப்பதிகாரம் மிக விரிவாகப் பேசுகிறது. மறவர்கள் வில்லையேந்திப் போருக்குச் செல்லும்போது   அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும் மறவர்கள்  தரும் அவிப்பலியை  ஏற்பவள் என்றும் பிறை சூடியவள், நெற்றிக் கண், பவள வாய், முத்துப் போன்ற சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பைக்கொண்ட மார்புக்கச்சு, வளைகள் அணிந்த கையில் சூலம்,  புலித்தோல் இடையாடை,  இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், கலைமானை ஊர்த்தியாகக் கொண்டவள் என்றும் வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கையை உடைய எருமைத்தலையின் மேல்  நிற்பவள் என்றும் அனைவரும் வணங்கும் குமரி என்றும் பலவாறாகக் கொற்றவையைச் சிலப்பதிகாரம் சிறப்பு செய்கிறது.

மேலும் சிலப்பதிகாரம் கொற்றவையின் பல்வேறு பெயர்களை பட்டியல் இடுகிறது.  கலையமர் செல்வி, நீலி,  அணங்கு, கொற்றவை, பாகம் ஆளுடையாள்.,அமரி, குமரி, கவுரி, சூலி,  ஐயை, கண்ணுதல்  திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள் என்று சிலப்பதிகாரம் கொற்றவையின் பலவகைப் பெயர்களைத் தருகிறது.

புறப்பொருள் வெண்பாமாலையும் கொற்றவையின் தோற்றத்தைச் சிங்கக்கொடியும் பசுங்கிளியும் ஏந்தியவள், கலைமானை ஊர்தியாகக் கொண்டு வெற்றி தரும் சூலத்தை உடையவள் என்று சிறப்பித்துச் சுட்டுகிறது.

இவ்வாறாக கொற்றவை வழிபாடு பழங்காலம் தொட்டே தமிழர்களின் பாரம்பரியமாக இருந்தது. அவ்வகையில் ஆயுதங்களை கொற்றவைக்கு படையிலிட்டு வழிபடுவது தமிழர்களின் மரபாக இருந்திருக்கிறது. அம்மரபின் தொடர்ச்சியாக வெற்றி தரும் நாளாக தமிழர்களின் பாரம்பரிய விழாவாகக் கருவி பூசை எனும் ஆயுத பூஜை இருந்தது எனலாம்.

*****

IT Form PDF Format 2022

IT Form PDF Format 2022

            2022 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கீட்டுக்கான PDF FoPDF Format இல் ஆன படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Wednesday 29 December 2021

முக்கிய தினங்கள்

முக்கிய தினங்கள்

ஜனவரி

01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.

05 - உலக டீசல் எந்திர தினம்

06 - உலக வாக்காளர் தினம்

08 - உலக நாய்கள் தினம்

09 - உலக இரும்பு தினம்

12 - தேசிய இளைஞர் தினம்

15 - இராணுவ தினம்

26 - இந்திய குடியரசு தினம்

26 - உலக சுங்க தினம்

29 - இந்திய செய்தித்தாள்கள் தினம்

30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

30 - தியாகிகள் தினம்

பிப்ரவரி

01 - உலக கைப்பேசி தினம்

03 - உலக வங்கிகள் தினம்

14 - உலக காதலர் தினம்

15 - உலக யானைக்கால் நோய் தினம்

19 - உலக தலைக்கவச தினம்

24 - தேசிய காலால் வரி தினம்

25 - உலக வேலையற்றோர் தினம்

26 - உலக மதுபான தினம்

28- தேசிய அறிவியல் தினம்

மார்ச்

08 - உலக பெண்கள் தினம்

15 - உலக நுகர்வோர் தினம்

20 - உலக ஊனமுற்றோர் தினம்

21 - உலக வன தினம்

22 - உலக நீர் தினம்

23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

24 - உலக காசநோய் தினம்

28 - உலக கால்நடை மருத்துவ தினம்

29 - உலக கப்பல் தினம்

ஏப்ரல்

01 - உலக முட்டாள்கள் தினம்

02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்

05 - உலக கடல் தினம்

05 - தேசிய கடற்படை தினம்

07 - உலக சுகாதார தினம்

12 - உலக வான் பயண தினம்

15 - உலக பசும்பால் தினம்

18 - உலக பரம்பரை தினம்

22 - உலக பூமி தினம்

30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே

01 - உலக தொழிலாளர் தினம்

03 - உலக சக்தி தினம்

08 - உலக செஞ்சிலுவை தினம்

09 - உலக கணிப்பொறி தினம்

11 - தேசிய தொழில் நுட்ப தினம்

12 - உலக செவிலியர் தினம்

14 - உலக அன்னையர் தினம்

15 - உலக குடும்ப தினம்

16 - உலக தொலைக்காட்சி தினம்

18 - உலக டெலஸ்கோப் தினம்

24 - உலக காமன்வெல்த் தினம்

27 - உலக சகோதரர்கள் தினம்

29 - உலக தம்பதியர் தினம்

30 - உலக முதிர்கன்னிகள் தினம்

31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

ஜீன்

01 - உலக டயலசிஸ் தினம்

02 - உலக ஆப்பிள் தினம்

04 - உலக இளம் குழந்தைகள் தினம்

05 - உலக சுற்றுப்புற தினம்

10 - உலக அலிகள் தினம்

18 - உலக தந்தையர் தினம்

23 - உலக இறை வணக்க தினம்

25 - உலக புகையிலை தினம்

26 - உலக போதை ஒழிப்பு தினம்

27 - உலக நீரழிவாளர் தினம்

28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை

01 - உலக மருத்துவர்கள் தினம்

08 - உலக யானைகள் தினம்

10 - உலக வானூர்தி தினம்

11 - உலக மக்கள் தொகை தினம்

14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)

16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

ஆகஸ்ட்

01 - உலக தாய்ப்பால் தினம்

03 - உலக நண்பர்கள் தினம்

06 - உலக ஹிரோஷிமா தினம்

09 -வெள்ளையனே வெளியேறு தினம்

09 - உலக நாகசாகி தினம்

18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்

29 - உலக தேசிய விளையாட்டு தினம்

30 - மாநில விளையாட்டு தினம்

செப்டம்பர்

05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்

06 - ஹிந்தி தினம்

07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)

08 - உலக எழுத்தறிவு தினம்

10 - உலக பேனா தினம்

12 - உலக மின்சார தினம்

13 - உலக மாலைக்கண் நோய் தினம்

16 - உலக ஓசோன் தினம்

18 - உலக அறிவாளர் தினம்

20 - உலக எழுத்தாளர்கள் தினம்

21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்

25 - உலக எரிசக்தி தினம்

26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்

27 - உலக சுற்றுலா தினம்

28 - உலக எரிமலை தினம்

29 - உலக குதிரைகள் தினம்

அக்டோபர்

01 - உலக மூத்தோர் தினம்

02 - உலக சைவ உணவாளர் தினம்

04 - உலக விலங்குகள் தினம்

05 - உலக இயற்கைச் சூழல் தினம்

08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்

08 இந்திய விமானப்படை தினம்

09 - உலக தபால் தினம்

16 - உலக உணவு தினம்

17 - உலக வறுமை ஒழிப்பு தினம்

24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்

30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்

14 - குழந்தைகள் தினம்

18 - உலக மனநோயாளிகள் தினம்

19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்

26 - உலக சட்ட தினம்

27 - உலக காவலர்கள் தினம்

28 - உலக நீதித்துறை தினம்

டிசம்பர்

01 - உலக எய்ட்ஸ் தினம்

02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்

10 - உலக மனித உரிமைகள் தினம்

14 - உலக ஆற்றல் தினம்

15 - உலக சைக்கிள் தினம்

23 - விவசாயிகள் தினம்

25 - திருச்சபை தினம்