Thursday 1 December 2022

புலனத்தில் வந்த அறிவுரைக் கொத்து

புலனத்தில் வந்த அறிவுரைக் கொத்து

முகநூல், கீச்சு, புலனம் ஆகியவற்றில் நீதி நூல் ஆசிரியர்கள் போல பலர் இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி வாழ்வுக்குப் பயன்படும் நெறிமுறைகளை, வழிமுறைகளை அறிவுரைக் கொத்துகளாக வழங்கி வருகின்றனர். அப்படி வந்த அறிவுரைக் கொத்தில் எனக்குப் பிடித்த ஒன்றை உங்களுக்குப் பகிர்கிறேன். இதை நீங்களும் படித்திருக்கக் கூடும். ஏன், நீங்களே கூட பகிர்ந்திருக்க முடியும்.

ü நல்ல விசயத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்ப்பதில் பிழையில்லையே என்ற அடிப்படையில் படித்துப் பாருங்கள்.

ü ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டுங்கள்.

ü மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப் பாருங்கள்.

ü 'நன்றி', 'தயவுசெய்து' - இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகியுங்கள்.

ü உங்கள் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

ü உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் மற்றவர்களை நடத்துங்கள்.

ü ரகசியங்களைக் காப்பாற்றுங்கள்.

ü புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்: பழைய நண்பர்களை மறந்துவிடாதீர்கள்.

ü தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்ளுங்கள்.

ü உங்கள் தவற்றைத் தயங்காமல் ஒத்துக்கொள்ளுங்கள்.

ü தைரியமாக இருங்கள். உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளியுங்கள்.

ü ஒரு போது மற்றவரை ஏமாற்றாதீர்கள்.

ü கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

ü கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதீர்கள்.

ü உங்கள் தோற்றத்தில் எப்போதும் கவனமாய் இருங்கள்.

ü மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்லுங்கள்.

ü ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதீர்கள்.

ü வதந்தி, வம்பு பேசுவதைத் தவிருங்கள்.

ü போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடுங்கள்.

ü ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதீர்கள். பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

ü வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

ü பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடுங்கள்.

******

No comments:

Post a Comment