Wednesday, 7 December 2022

PM KISAN இல் E-kyc செய்ய…

PM KISAN இல் E-kyc செய்ய…

பிஎம் கிசான் போர்ட்டலில் நீங்களே எளிதாக E-kyc ஐப் பதிவு செய்யலாம்.

கீழே இணைப்பில் உள்ள லிங்கை கிளிக் செய்த பிறகு தோன்றும் திரையில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

பின்னர் Search என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.

பின் Submit என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் தொலைபேசியில் நான்கு இலக்க OTP கிடைக்கும்.

அதை நீங்கள் சமர்ப்பித்தால் ஆறு இலக்க ஆதார் OTP உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும்.

ஆதார் OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும், உங்கள் E-kyc நிறைவடையும்.

இந்த முறையில் நீங்கள் PM KISAN போர்ட்டலில் E-kyc ஐ சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் ஆதார் தொலைபேசி எண்ணுடன் சரியான இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.  இணைப்பு இல்லை என்றால், அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்றால், உங்கள் தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைப்பார்கள். இந்த இணைப்பிற்கு 72 மணிநேரம் ஆகும்.  அதன் பிறகு நீங்கள் மேலே குறிப்பிட்ட முறையில் உங்கள் E-kyc ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

E-kyc சமர்ப்பிப்பதற்கான இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 Click Here To Get The Link

*****

No comments:

Post a Comment