பணத்திற்குப் பலவிதமான பெயர்கள்
பணத்திற்குப்
பலவிதமான பெயர்கள் இருப்பதைப் புலனத்தில் வந்த இப்பகிர்விலிருந்து தெரிந்து கொண்டேன்.
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் சிந்திக்க வைத்த பதிவு. இனி அந்தப் பதிவு…
பணத்தைக்
கையில பிடித்துக் கொஞ்சம் தள்ளி வெச்சி யோசித்துப் பாத்தால், அடேங்கப்பா இந்த பணத்துக்கு
எவ்வளவு பெயர்கள் என்று நீங்களே பாருங்களேன்.
ü கோவில்
உண்டியலுக்குச் செலுத்தினால் காணிக்கை
ü யாசிப்பவருக்குக்
கொடுத்தால் பிச்சை
ü அர்ச்சகருக்குக்
கொடுத்தால் தட்சணை
ü கல்விக்
கூடங்களில் கட்டணம்
ü திருமணத்தில்
ஸ்ரீதனம்
ü திருமண
விலக்கில் ஜீவனாம்சம்
ü விபத்துகளில்
இறந்தால் நஷ்டஈடு
ü இன்சூரன்ஸ்க்காக
செலுத்தினால் காப்பீடு
ü வங்கிகளில்
வைத்தால் வைப்புந்தொகை
ü ஏழைகள்
கேட்டுக் கொடுத்தால் தர்மம்
ü நாமாக
விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம்
ü திருமண
வீடுகளில் பரிசாக மொய்
ü திருப்பித்
தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது கடன்
ü திருப்பித்
தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது அன்பளிப்பு
ü விரும்பிக்
கொடுத்தால் நன்கொடை
ü நீதிமன்றத்தில்
செலுத்தினால் அபராதம்
ü அரசுக்குச்
செலுத்தினால் வரி
ü அரசு
மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி
ü செய்த
வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம்
ü தினமும்
கிடைப்பது கூலி
ü பணி
ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம்
ü சட்டத்திற்கு
விரோதமாக கையூட்டாக வாங்குவதும் கொடுப்பதும் லஞ்சம்
ü கடன்
வாங்கினால் அத்தொகை அசல்
ü வாங்கியக்
கடனுடன் கொடுக்கும் போது வட்டி
ü தொழில்
தொடங்கும் போது முதலீடு
ü தொழிலில்
கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம்
ü குருவிற்குக்
கொடுக்கும் போது குருதட்சணை
ü ஹோட்டலில்
நல்குவது டிப்ஸ்
இவ்வாறு
பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை.
இந்தப்
பணம் என்ற காகிதத்தைப் பெற சிலர் அன்பை இழக்கின்றனர். சிலர் பண்பை இழக்கின்றனர். சிலர்
நட்புகளை இழக்கின்றனர். சிலர் உறவுகளை இழக்கின்றனர். சிலர் கற்பை இழக்கின்றனர். சிலர்
கண்ணியத்தை இழக்கின்றனர். சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர். சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
பலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்.
*****
No comments:
Post a Comment