ஷ்வாஸ் (SHWAAS) சிறுவர் திரைப்படத்தைக் காண…
திரைப்படம் குறித்த
செய்திகள்
Ø ஷ்வாஸ்
(Shwaas, மராத்தி : श्वास ) என்பது 2004 இல் வெளியான ஒரு மராத்தி திரைப்படம் ஆகும்.
Ø இது
2004 ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பபட்டது.
Ø அங்கு
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதில் 6 வது இடத்தைப் பிடித்தது.
Ø இதன்
கதைக்களம் புனேவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
Ø இப்படம்
குறைந்த செலவில் ரூபாய் 30 லட்சம் (3 மில்லியன்) செலவில் தயாரிக்கபட்டது.
Ø ஷ்வான்
2004 ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது.
Ø 50 ஆண்டுகளுக்குப்
பிறகு மராத்திய திரைப்படம் பெற்ற தேசிய விருது இதுவாகும்.
Ø அறிமுக
இயக்குனர் சந்தீப் சாவந்த் இயக்கிய, இப்படம் 30 நாட்களில் சிந்துதுர்க், கொங்கண், புனே,
மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.
Ø தயாரிப்புக்குப்
பிந்தைய பணிகளை முடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது. ஷ்வாஸ் "மராத்தி திரையுலகின்
குறிப்பிடத்தக்க திருப்பம்" என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
Ø இதன்
வெற்றிக்குப் பிறகு, இந்தி, வங்காளி, தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்டது.
படத்தில் நடித்திருக்கும்
நடிகர்கள்
Ø அஷ்வின்
சித்தலே (பரசுராம் விசாரே, விழித்திரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்)
Ø அருண்
நலவாடே (பரசுராமின் தாத்தா அவனை மும்பைக்கு அழைத்துச் செல்கிறார்)
Ø சந்தீப்
குல்கர்னி (பரசுராமின் மருத்துவர் மிலிந்த் சானே)
Ø அம்ருதா
சுபாஷ் ( அசவரி என்ற மருத்துவ சமூக சேவகர்)
Ø கணேஷ்
மஞ்ச்ரேக்கர் ( பரசுராம் மற்றும் தாத்தாவுடன் மும்பைக்கு வரும் பரசுராமின் மாமா திவாகர்)
Ø அஷ்வினி
கிரி (கிராமத்தில் தங்குகியுள்ள பரசுராமின் தாய்).
Ø விபாவாரி
தேஷ்பாண்டே வரவேற்பாளராக
இப்படத்தின் சுருக்கமான
கதை
மிக
அரிதான கண் புற்றுநோயால் பாதிக்கபட்ட தன் பேரனை காப்பாற்றப் போராடுகிறார் அவன் தாத்தா.
ஆனால் அவன் உயிரோடு வாழவேண்டுமானால் அவன் கண்கள் இரண்டையும் நீக்கவேண்டும் என்று மருத்துவர்கள்
அவரிடம் கூறுகின்றனர். இந்த உண்மையை எப்படி தன் பேரனிடம் சொல்லி புரியவைப்பது என்று
தாத்தா தவிக்கிறார். இறுதியில் இது அவருக்கு எவ்வாறு சாத்தியமானது என்பதே கதையாகும்.
இப்படம் பெற்றுள்ள
விருதுகள்
இந்த
படம் தேசிய மற்றும் மாநில அளவில் பல விருதுகளை பெற்றது. ஷ்வாஸ் மகாராஷ்டிரா அரசு திரைப்பட
விருதையும், பின்னர் இந்தியாவின் மிக உயர்ந்ததான தேசிய திரைப்பட விருதையும் வென்றது.
1954 க்குப் பிறகு முதல் முறையாக மராத்தி திரைப்படத்துக்கு விருதைக் கொண்டுவந்தது.
அஸ்வின் சித்தாலே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை வென்றான்.
2003:
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
2003:
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய திரைப்பட விருது - அஷ்வின் சிடலே
இப்படத்தின் தமிழ் விமர்சனத்தைக் காண…
இப்படத்தைப்
பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்யவும்.
*****
No comments:
Post a Comment