Monday 30 October 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான தன்னைப் பற்றிய சொற்றொடர்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான தன்னைப் பற்றிய சொற்றொடர்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான தன்னைப் பற்றிய சொற்றொடர்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

என் பெயர் ……………………..

என் அப்பாவின் பெயர் ……………………..

என் அம்மாவின் பெயர் ……………………..

என் அண்ணனின் பெயர் ……………………..

என் அக்காவின் பெயர் ……………………..

என் தம்பியின் பெயர் ……………………..

என் தங்கையின் பெயர் ……………………..

என் தெருவின் பெயர் ……………………..

என் கிராமத்தின் பெயர் ……………………..

என் பள்ளியின் பெயர் ……………………..

என் ஒன்றியத்தின் பெயர் ……………………..

என் மாவட்டத்தின் பெயர் ……………………..

என் மாநிலத்தின் பெயர் ……………………..

என் நாட்டின் பெயர் ……………………..

நான் நாள்தோறும் குளிப்பேன்.

நான் தூய்மையாக இருப்பேன்.

நான் சத்தான உணவை உண்பேன்.

நான் சாலையில் கவனமாகச் செல்வேன்.

நான் ஆபத்து தரும் செயல்களைச் செய்ய மாட்டேன்.

நான் அன்றாடம் நடப்பதைப் பெற்றோரிடம் கூறுவேன்.

*****

Thursday 26 October 2023

மெல்ல கற்போருக்கான ஒன்பதாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான ஒன்பதாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Tuesday 24 October 2023

Nobel Prize Details – 2023

Nobel Prize Details – 2023

The Nobel Prize is awarded every year to people who have made outstanding contributions in six fields: medicine, physics, chemistry, peace, literature, and economics.

The Nobel Prize in Medicine will be jointly awarded to Katalin Carrico and Truve Wiseman for their discovery of a nucleoside modification that is considered the basis for the development of an mRNA Covid-19 vaccine.

The Nobel Prize in Physics is to be awarded jointly to Maungi Bawendi, Louis Bruce and Alexey Ekimov for the discovery and synthesis of quantum dots.

The Nobel Prize in Chemistry is to be awarded jointly to Pierre Agostini, Ferenc Krause and Annie L. Houllier for an experimental method that produces attosecond vibrations in light to study electron dynamics in matter.

Norwegian author Jan Fosse has been awarded the Nobel Prize for Literature. The prize is said to be in recognition of Bose's “innovative plays and prose that give voice to the unspeakable”.

 Iranian social activist Nargis Mohammadi has been awarded the Nobel Peace Prize for her fight against the oppression of women and for human rights and freedom.

It has been announced that Claudia Goldin, a professor at Harvard University in the United States, has been selected for the Nobel Prize in Economic Sciences. She was chosen for the prize for her improved understanding of the effects of the female labor market, the Nobel selection committee said.

The Nobel Prizes will be awarded in December in Oslo and Stockholm to the winners in all six fields. A cash prize of Rs 8.3 crore, an 18 carat gold medal and a certificate will be awarded.

*****

Monday 23 October 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான படித்தும் எழுதியும் பழகுதல் பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான படித்தும் எழுதியும் பழகுதல்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான படித்தும் எழுதியும் பழகுதலுக்கான சொற்றொடர்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

அறிவிப்புகளை வாசித்து அறிதல்

பூக்களைப் பறிக்காதீர்!

மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்!

உணவை வீணாக்காதீர்!

வருகைக்கு நன்றி!

தண்ணீரை வீணாக்காதீர்!

படிகளில் பயணம் செய்யாதீர்!

பயணச்சீட்டு வாங்குவீர்!

வரிசையில் நின்று ஏறுவீர்!

கரம், சிரம் புறம் நீட்டாதீர்!

*****

இரட்டைத் தொடர்கள் மற்றும் அடுக்குத் தொடர்கள்

சிறுவர்கள் கலகலவெனச் சிரித்தனர்.

நத்தை மெல்ல மெல்ல நகர்ந்தது.

குடம் பளபளவென மின்னியது.

மான் துள்ளி துள்ளி ஓடியது.

ஆறு சலசலவென ஓடியது.

*****

சுற்றி நிகழ்பவற்றைக் கூறுதல்

மரம் காற்றில் அசைகிறது.

குருவி கீச்சிடுகிறது.

மீன் துள்ளிக் குதிக்கிறது.

கொக்கு மீனைப் பிடிக்க நிற்கிறது.

கிளி பழம் தின்ன பறந்து வருகிறது.

*****

Wednesday 18 October 2023

மெல்ல கற்போருக்கான எட்டாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான எட்டாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Tuesday 17 October 2023

2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு விவரங்கள்

2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு விவரங்கள்

மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு எம்ஆர்என்ஏ  கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட இருக்கிறது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் புள்ளிகளை கண்டறிந்து தொகுத்ததற்காக மவுங்கி பவெண்டி,  லூயிஸ் புரூஸ்,  அலெக்சி எகிமோவ் ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட இருக்கிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசு, பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட இருக்கிறது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ஸேயின் “சொல்ல முடியாதவற்றுக்காக குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக இப்பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் – சுதந்திரத்துக்காவும் போராடியதற்காக ஈரானைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வரும் கிளாடியா கோல்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் தொழிலாளர் சந்தையின் விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலுக்காக அவர் இந்த பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டதாக நோபல் தேர்வு குழு தெரிவித்துள்ளது.

6 துறைகளில் தேர்வானவர்களுக்கும்  ஆஸ்லோ மற்றும் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் மாதம் நடைபெறும் விழாவில் நோபல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. ரொக்க பரிசாக 8.3 கோடி ரூபாயும், 18 காரட் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

*****

Monday 16 October 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி எழுதிப் பழகுதல் பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி எழுதிப் பழகுதல்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி மற்றும் எழுதிப் பழகுவதற்கான சொற்றொடர்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

சறுக்கு மரத்தில் சறுக்கலாம்.

வழுக்கு மரத்தில் வழுக்கலாம்.

*

காற்றிலே பறந்த கீற்று, சேற்றிலே விழுந்தது.

*

உருண்டு விழுந்த உருளை உருளுகிறது, புரளுகிறது.

*

வழலைக் கட்டி நழுவி விழுந்தது.

*

ஆற்றங்கரையின் ஓரம், பாறையெல்லாம் ஈரம்.

*

கிளையின் நிழல் மலையில் விழுந்தது.

*

வெள்ளை முயல்கள் வயலிலே துள்ளி விளையாடின.

*

முதலையும் தவளையும் மழையில் நனைந்தன.

*

குளக்கரையோரத்துக் குழியில் குதித்து விழுந்தது நரி.

*

ஆற்றின் இருபுறம் கரை.

ஆடையில் படிவது கறை.

*

உயர்ந்து நிற்பது மலை.

உயிர்களைக் காப்பது மழை.

*

நீரில் மலர்வது அல்லி.

நீரை எடுத்தார் அள்ளி.

*

விளக்கில் கிடைப்பது ஒளி.

வெடித்தால் எழுவது ஒலி.

*

மாட்டிற்கு இருப்பது வால்.

மரத்தை அறுப்பது வாள்.

*

சுவரில் ஊர்வது பள்ளி.

சுவைத்துக் கற்க பள்ளி.

*****

Friday 13 October 2023

சுகாதாரச் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சுகாதாரச் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதாரச் செவிலியர் பணியிடங்களுக்கு அக்டோபர்  31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்  அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. மேலதிக விவரங்களை அறிந்து கொள்ளவும் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிக்குச் செல்லவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.mrb.tn.gov.in/

*****

Thursday 12 October 2023

மாணவர் தரநிலை அறிக்கையை நீங்களே தயாரித்துக் கொள்ள…

மாணவர் தரநிலை அறிக்கையை நீங்களே தயாரித்துக் கொள்ள…

பருவத் தேர்வுகளின் முன்னேற்றம் குறித்து மாணவர்களுக்கு வழங்கும் மாணவர் தர நிலை அறிக்கையை (Report Card) தயாரித்துக் கொள்ள கீழே உள்ள இணைப்பில் உள்ள கோப்பினை A4 அளவிலான அட்டை அல்லது தாளில்  Front & Back ஆக அச்சிட்டுக் கொண்டு இரு சமபாகமாகக் கத்தரித்துக் கொண்டால் இரண்டு தரநிலை அறிக்கைகளைப் பெறலாம். தரநிலை அறிக்கைக்கான கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Tuesday 10 October 2023

கலைத் திருவிழா - 2023

கலைத் திருவிழா - 2023

2023 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் கலைத் திருவிழா தொடர்பான நெறிமுறைகள், தகவல்கள் மற்றும் போட்டிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Monday 9 October 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல் வேறுபாடுகள் பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல் வேறுபாடுகள்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல் வேறுபாடுகள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

நெடி              -           நொடி

செல்               -           சொல்

பெய்              -           பொய்

மெட்டு          -           மொட்டு

தென்னை      -           தொன்னை

கேள்               -           கோள்

தேள்               -           தோள்

சேறு               -           சோறு

தேடு               -           தோடு

சேலை           -           சோலை

*****

Thursday 5 October 2023

மெல்ல கற்போருக்கான ஏழாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான ஏழாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Wednesday 4 October 2023

வாக்காளர் பட்டியலில் பாகம் எண், வரிசை எண் அறிய…

வாக்காளர் பட்டியலில் பாகம் எண், வரிசை எண் அறிய…

தேர்தல் பணிக்கான படிவத்தை நிரப்பும் போது பாகம் எண், வரிசை எண் குறித்த விவரங்களை அறிந்து நிரப்ப கீழே உள்ள இணைப்பிற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணைக் கொடுத்து, அத்துடன் திரையில் தோன்றும் Captcha Codeஐயும் கொடுத்தால் தேவையான விவரங்களைப் பெறலாம். விவரங்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://electoralsearch.eci.gov.in/

*****

Monday 2 October 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான உணவுச் சொற்கள் பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான உணவுச் சொற்கள்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான உணவுச் சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

குட்டி இட்டலி

நெய் தோசை

மசால் தோசை

ஆப்பம்

இடியாப்பம்

கேழ்வரகு அடை

சோளப்பிட்டு

அவல் உப்புமா

சப்பாத்தி

பூரி கிழங்கு

பொங்கல்

மெதுவடை

இனிப்புப் பனியாரம்

பழச்சாறு

பழக்கூழ்

*****

Sunday 1 October 2023

உங்கள் மீது முதலீடு செய்யுங்கள்!

உங்கள் மீது முதலீடு செய்யுங்கள்!

மனிதர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கு வாரன் பப்பெட் என்ன சொல்கிறார் என்றால், உங்கள் மீது முதலீடு செய்யுங்கள் என்கிறார்.

உங்கள் மீது முதலீடு செய்யுங்கள் என்றால் உங்களுக்காகக் காப்பீடு எடுத்துக் கொள்வதா? உங்களுக்காகச் செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்த்துக் கொள்வதா? அவையும் உங்கள் மீது செய்யும் முதலீடுகள்தான் என்றாலும் வாரன் பப்பெட் சொல்வது அவற்றையல்ல.

உங்கள் திறன்களை அதிகப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதைத்தான் பப்பெட் உங்கள் மீது செய்ய வேண்டிய முதலீடு என்கிறார்.

மலுங்கிப் போன கோடரியால் உங்களால் எத்தனை மரங்களையும் வெட்ட முடியும். அதே போல திறன் குறைவைச் சுமந்து கொண்டே இருந்தால் உங்களால் எத்தனை காரியங்களைச் சாதிக்க முடியும் என்று சொல்லுங்கள்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

கோடரியைக் கூர் தீட்டுங்கள். அதற்காகக் காலம் கொஞ்சம் செலவழியட்டும். பிறகு பாருங்கள் உங்கள் மரம் வெட்டும் வேகத்தையும் வீச்சையும். அதே போலத்தான் உங்கள் திறனை அதிகம் செய்யுங்கள். திறனோடு இப்போது காரியம் ஆற்றிப் பாருங்கள். உங்கள் காரியத்தின் வேகமும் வீச்சும் கூடியிருக்கும்.

உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் எப்போதும் ஒன்றைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அது என்னவென்றால் உங்கள் அறிவைக் கூர் தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் திறனை, அறிவைக் கூர் தீட்டிக் கொள்வதற்காக நீங்கள் என்னென்ன செய்வீர்களோ, அதற்காக நீங்கள் என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைத்தான் பப்பெட் உங்கள் மீது நீங்கள் செய்ய வேண்டிய முதலீடு என்கிறார்.

உலகில் நஷ்டமே அடையாத முதலீடு என்றும் பப்பெட் உங்கள் மீது செய்யும் முதலீட்டைத்தான் சொல்கிறார். அவர் எப்படி தன் மீதான முதலீட்டைச் செய்தார் என்பதையும் அவர் வழியிலேயே பார்த்து விட்டால் உங்களுக்கு இன்னும் தெளிவாகும்.

பப்பெட் சிறு வயதிலிருந்தே தன்னைக் கூர் தீட்டிக் கொள்ள ஆரம்பித்தார். அவர் எப்படி பணக்காரராவது என்று யோசித்தார்.

அவருக்கு இரண்டு வழிகள் தெரிந்தன. பணக்காரராவதற்கு ஒன்று வணிகத்தை ஆரம்பிக்க வேண்டும். மற்றொன்று நல்ல வணிகத்தில் முதலீடு செய்ய வேண்டும். பப்பெட்டுக்கு இரண்டாவது வழிதான் தனக்கு ஏற்றது என்று தோன்றியது. அன்றிலிருந்து அவர் நல்ல வணிகத்தில் எப்படி முதலீடு செய்வது என்பதைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே வருகிறார். ஆம், அவர் தான் கற்பதை இன்னும் முடிக்கவில்லை என்றுதான் சொல்கிறார். முதலீடு செய்வது குறித்த தனது அறிவைக் கூர்மைபடுத்திக் கொண்டே வருகிறார். இதைத்தான் பப்பெட் தன் மீது செய்யும் முதலீடு என்கிறார். இந்த முதலீட்டைச் செய்யாமல் அவர் வெறுமனே தனது பண மற்றும் பங்கு முதலீடுகளைச் செய்திருந்தால் அவரும் சராசரியான ஒரு முதலீட்டாளராகவே இருந்திருப்பார்.

தனக்குத் தேவையான அறிவைப் பெறுவதில் அவர் சளைக்காமல் ஈடுபடுகிறார். இதைத்தான் அவர் தன் மீது தான் செய்து கொள்ளும் முதலீடு என்று அடிக்கடிச் சொல்கிறார். இந்த அறிவு முதலீட்டின் மூலம் பப்பெட் சிலவற்றைச் சொல்கிறார். அது உங்களுக்கும் பயன்படும்.

ü உங்களுக்குப் பல திறமைகள் தேவையில்லை. சில திறமைகள் போதுமானது. அந்தச் சில திறமைகளுக்குத் தேவையானவற்றை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள்.

ü கடினமாக உழைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அறிவை முதலீடு செய்து சாமர்த்தியமாக உழைத்தால் போதும்.

ü சிறந்தவற்றை ஈயடிச்சான் காப்பியடியுங்கள். காப்பி அடித்ததிலிருந்து சிறந்தவற்றை உருவாக்குங்கள்.

ü ஆரம்பிப்பதைத் தள்ளிப் போடாதீர்கள். இருப்பதை வைத்து ஆரம்பித்து விடுங்கள்.

*****