தமிழ் மெல்ல கற்போருக்கான படித்தும் எழுதியும் பழகுதல்
பயிற்சி
தமிழ் மெல்ல கற்போருக்கான படித்தும் எழுதியும்
பழகுதலுக்கான சொற்றொடர்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :
அறிவிப்புகளை வாசித்து அறிதல்
பூக்களைப் பறிக்காதீர்!
மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்!
உணவை வீணாக்காதீர்!
வருகைக்கு நன்றி!
தண்ணீரை வீணாக்காதீர்!
படிகளில் பயணம் செய்யாதீர்!
பயணச்சீட்டு வாங்குவீர்!
வரிசையில் நின்று ஏறுவீர்!
கரம், சிரம் புறம் நீட்டாதீர்!
*****
இரட்டைத் தொடர்கள் மற்றும் அடுக்குத் தொடர்கள்
சிறுவர்கள் கலகலவெனச் சிரித்தனர்.
நத்தை மெல்ல மெல்ல நகர்ந்தது.
குடம் பளபளவென மின்னியது.
மான் துள்ளி துள்ளி ஓடியது.
ஆறு சலசலவென ஓடியது.
*****
சுற்றி நிகழ்பவற்றைக் கூறுதல்
மரம் காற்றில் அசைகிறது.
குருவி கீச்சிடுகிறது.
மீன் துள்ளிக் குதிக்கிறது.
கொக்கு மீனைப் பிடிக்க நிற்கிறது.
கிளி பழம் தின்ன பறந்து வருகிறது.
*****
No comments:
Post a Comment