Monday 16 October 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி எழுதிப் பழகுதல் பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி எழுதிப் பழகுதல்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி மற்றும் எழுதிப் பழகுவதற்கான சொற்றொடர்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

சறுக்கு மரத்தில் சறுக்கலாம்.

வழுக்கு மரத்தில் வழுக்கலாம்.

*

காற்றிலே பறந்த கீற்று, சேற்றிலே விழுந்தது.

*

உருண்டு விழுந்த உருளை உருளுகிறது, புரளுகிறது.

*

வழலைக் கட்டி நழுவி விழுந்தது.

*

ஆற்றங்கரையின் ஓரம், பாறையெல்லாம் ஈரம்.

*

கிளையின் நிழல் மலையில் விழுந்தது.

*

வெள்ளை முயல்கள் வயலிலே துள்ளி விளையாடின.

*

முதலையும் தவளையும் மழையில் நனைந்தன.

*

குளக்கரையோரத்துக் குழியில் குதித்து விழுந்தது நரி.

*

ஆற்றின் இருபுறம் கரை.

ஆடையில் படிவது கறை.

*

உயர்ந்து நிற்பது மலை.

உயிர்களைக் காப்பது மழை.

*

நீரில் மலர்வது அல்லி.

நீரை எடுத்தார் அள்ளி.

*

விளக்கில் கிடைப்பது ஒளி.

வெடித்தால் எழுவது ஒலி.

*

மாட்டிற்கு இருப்பது வால்.

மரத்தை அறுப்பது வாள்.

*

சுவரில் ஊர்வது பள்ளி.

சுவைத்துக் கற்க பள்ளி.

*****

No comments:

Post a Comment