2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு
விவரங்கள்
மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம்
ஆகிய 6 துறைகளில் மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும்
நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு எம்ஆர்என்ஏ கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக்
கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக கடாலின் கரிகோ மற்றும்
ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட இருக்கிறது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் புள்ளிகளை கண்டறிந்து
தொகுத்ததற்காக மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட
இருக்கிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு, பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல்
ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக பியரி அகோஸ்தினி,
ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட இருக்கிறது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ஸேயின் “சொல்ல முடியாதவற்றுக்காக குரல் கொடுக்கும் அவரது
புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக” இப்பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் – சுதந்திரத்துக்காவும்
போராடியதற்காக ஈரானைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான
நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் ஹார்வர்டு
பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வரும் கிளாடியா கோல்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் தொழிலாளர் சந்தையின் விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலுக்காக
அவர் இந்த பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டதாக நோபல் தேர்வு குழு தெரிவித்துள்ளது.
6 துறைகளில் தேர்வானவர்களுக்கும் ஆஸ்லோ மற்றும் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் மாதம் நடைபெறும்
விழாவில் நோபல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. ரொக்க பரிசாக 8.3 கோடி ரூபாயும், 18 காரட்
தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
*****
No comments:
Post a Comment