கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.04.2026
இன்று சர்வதேச குழந்தைகள் புத்தக
தினம்.
1) தனியார்
பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம்.
2) வணிகப்
பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 195.50 உயர்த்தப்பட்டுள்ளது.
3) ஆந்திரப்
பிரதேசத்தின் ஒரே நிரந்தர தலைநகரம் அமராவதி என்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
4) ஈரானின்
கடற்படை மற்றும் ஏவுகணைத் திறனை முழுமையாக முடக்கும் வகையில் ஆபரேஷன் எபிக் பியூரி
என்ற பெயரில் அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.
5) அமெரிக்கா
தனது தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற 18 முக்கிய அமெரிக்கத்
தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைப்போம் என ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.
6) 2026
ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.3% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
7) தமிழகத்தின்
வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் இன்று…
1) இன்று
உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்.
2)
1805 இல் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் பிறந்த தினம் இன்று. இவரது பிறந்த தினமே சர்வதேச
குழந்தைகள் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3) தந்தியைக்
கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் 1872 இல் மறைந்த தினம் இன்று.
Education & GK News
Today is
International Children's Book Day.
1) Applications for admission under the 25% reservation
quota in private schools can be submitted from April 20 to May 18.
2) The price of commercial LPG cylinders has been hiked
by Rs. 195.50.
3) A bill designating Amaravati as the sole permanent capital
of Andhra Pradesh has been passed in Parliament.
4) The United States is continuing its attacks—under the
codename 'Operation Epic Fury'—with the aim of completely neutralizing Iran's
naval and missile capabilities.
5) Iran's Revolutionary Guard Corps has warned that if
the United States does not cease its attacks, they will target 18 major
American technology companies, including Apple, Google, and Meta.
6) The International Monetary Fund (IMF) has projected
that global economic growth will stand at 3.3% in 2026.
7) The Meteorological Department has stated that
temperatures in Tamil Nadu are likely to rise by 2 to 3 degrees Celsius above
normal levels.
Today in
History…
1) Today is World Autism Awareness Day.
2) Today marks the birth anniversary of Hans Christian
Andersen, who was born in 1805. It is noteworthy that his birthday is
celebrated as International Children's Book Day.
3) Today marks the death anniversary of Samuel Morse,
the inventor of the telegraph, who passed away in 1872.



































