கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.03.2026
1) தமிழகத்தில்
பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 17 முதல் தொடங்குகிறது.
2) வரும்
கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு சூன் 4 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
3) புகழ்பெற்ற
திருவாரூர் ஆழித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
4) தமிழக
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 11 மணியிலிருந்து துவங்குகிறது.
ஏப்ரல் 6 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
5) பெட்ரோல்,
டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு 10 ரூபாய் குறைத்துள்ளது.
6) ரிலையன்ஸ்,
நயாரா போன்ற தனியார் நிறுவன பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்
உயர்த்தப்பட்டுள்ளது.
7) வளைகுடா
போரால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில
முதல்வர்களிடமும் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
8) அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நோ கிங்க்ஸ் என்ற முழக்கத்தோடு
போராடத் தொடங்கியுள்ளனர்.
9) ஐரோப்பிய
நாடுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்குத் தங்கள் எதிர்ப்பைத்
தெரிவித்து வருகின்றன.
10)
வளைகுடா போர் காரணமாக ஈரானின் பணவீக்கம் 50.6 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் இன்று…
1)
1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக மகாத்மா காந்தி அழைப்பு விடுத்த தினம் இன்று.
2) புகழ்பெற்ற
டச்சு ஓவியர் வான்கா 1853 இல் பிறந்த தினம் இன்று.
3) மயக்க
மருந்தைப் பயன்படுத்தி உலகின் முதல் அறுவை சிகிச்சை கிராபோர்ட் லாங் என்பவரால் அமெரிக்காவில்
1842 இல் நடந்த தினம் இன்று.
Education & GK News
1) Summer vacation for schools in Tamil Nadu begins on
April 17.
2) It has been announced that schools for the upcoming
academic year will reopen on June 4.
3) The renowned Tiruvarur Aazhi Therottam (Chariot
Festival) took place yesterday; thousands of devotees participated, holding the
ropes and pulling the chariot.
4) The filing of nominations for the Tamil Nadu
Legislative Assembly elections begins today at 11:00 AM. Nominations may be
filed until April 6.
5) The Central Government has reduced the excise duty on
petrol and diesel by Rs.10.
6) The price of petrol has been hiked by Rs.5 per liter
at petrol stations operated by private companies such as Reliance and Nayara.
7) Prime Minister Narendra Modi held a video conference
consultation with all State Chief Ministers regarding the extraordinary
situation arising from the Gulf War.
8) The people of the United States have begun protesting
against President Donald Trump under the slogan "No Kings."
9) European nations have been expressing their
opposition to the military actions undertaken by US President Donald Trump.
10) Reports indicate that Iran's inflation rate has
risen to 50.6 percent as a result of the Gulf War.
Today in
History…
1) Today marks the day in 1919 when Mahatma Gandhi
issued a call for protest against the Rowlatt Act.
2) Today is the birth anniversary of the renowned Dutch
painter, Vincent van Gogh, who was born in 1853.
3) Today marks the day in 1842 when Crawford Long
performed the world's first surgical procedure utilizing anesthesia in the
United States.





No comments:
Post a Comment