Friday, 13 March 2026

மனிதனிலிருந்து ஏன் குரங்கு தோன்றவில்லை?

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால்,

மனிதனிலிருந்து ஏன் குரங்கு தோன்றவில்லை?

இது ஒரு செம கேள்வி! பரிணாம வளர்ச்சி என்பது ஒரு ஏணி கிடையாது, ஏறிய பின் இறங்கிக் கொள்ள. அது ஒரு கிளை பிரிந்து செல்லும் மரம். குரங்கும் மனிதனும் ஒரே மூதாதையரிடமிருந்து பிரிந்த இரு வேறு கிளைகள்.

சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அதன் ஒரு கிளை காடுகளிலேயே தங்கிக் குரங்குகளாக பரிணமித்தன. இன்னொரு கிளை சமவெளிக்கு வந்து நிமிர்ந்து நடந்து மனிதர்களாக மாறி விட்டன.

இயற்கையில் ஏன் மனிதன் மீண்டும் குரங்காக மாறவில்லை என்று கேட்பது, ஏன் ஐபோன் 16 மீண்டும் நோக்கியா 1100 ஆக மாறவில்லை என்று கேட்பது போலத்தான். பரிமாணத்தில் நோ ரிவர்ஸ் கியர்.

மனிதன் ஏற்கனவே குரங்கை விட மேம்பட்டவனாக அப்கிரேட் ஆகிவிட்டான். மீண்டும் குரங்காக மாறுவது என்பது உயிர்வாழத் தேவையான தகுதியைக் குறைத்துக் கொள்வது போல. பரிணாமத்துக்குப் பின்னடைவு பிடிக்காது.

குரங்கு என்பது மனிதனுக்கு முந்தைய ஸ்டாப்பிங். அது காடுகளுக்கு ஏற்ற பெர்பெக்ட் டிசைன். மனிதன் நகரங்களுக்கு அல்லது நகரங்கள் என்ற நரகங்களுக்கு ஏற்ற பெர்பெக்ட் டிசைன்.

ஒரு மீன் ஏன் பறவையாக மாறவில்லை என்று கேட்பதில் அர்த்தமில்லை, ஏனென்றால் கடலில் வாழ்வதற்கு மீன் வடிவம் தான் பெஸ்ட்.

காடுகள் இல்லாத இன்றைய சூழ்நிலையில், நகரங்களுக்கு வந்துவிட்ட குரங்குகள் மீண்டும் மனிதனாகி விடுமா என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழுமானால், பாஸ் அதற்கு நீங்கள் டார்வினாகித்தான் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment