கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.03.2026
1) மத்திய
கிழக்கு நாடுகளான ஈரான், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் போர் பதற்றம்
காரணமாக, அங்கு நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
2) தமிழக
ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளர்.
3) தமிழக
ஆளுநர் பொறுப்பைக் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கூடுதலாகக் கவனிக்க
உள்ளார்.
4) தமிழகத்தின்
புதிய ஆளுநராக அஜய்குமார் பல்லா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
5) ஈரானின்
தலைவர் கமேனி உயிரிழந்ததற்கு இந்தியா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இராணுவ மோதல்
எதற்கும் தீர்வல்ல என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
6) மத்திய
கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்
82 டாலரைத் தாண்டியுள்ளது.
7) 2025-26
நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5% முதல் 7.8% வரை இருக்கும் என டெலாய்ட்
நிறுவனம் கணித்துள்ளது.
8) டி20
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வரலாற்றில் இன்று…
1)
1967 இல் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பதவியேற்ற தினம் இன்று.
2) இரஷ்ய
வேதியியலாளர் டிமிட்ரி மெண்டலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை 1869 இல் சமர்ப்பித்த
தினம் இன்று.
3) உலகப்
புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் மற்றும் சிற்பி மைக்கலாஞ்சலோ 1475 இல் பிறந்த தினம் இன்று.
Education & GK News
1) Due to the war tension prevailing in the Middle East
countries including Iran, Saudi Arabia, Qatar, the CBSE 10th and 12th class
exams that were to be held there have been postponed.
2) Tamil Nadu Governor R.N. Ravi has been appointed as
the Governor of West Bengal.
3) Kerala Governor Rajendra Vishwanath Arlekar will
additionally look after the duties of the Governor of Tamil Nadu.
4) It is said that Ajay Kumar Bhalla is likely to be
appointed as the new Governor of Tamil Nadu.
5) India has expressed its condolences on the death of
Iran's leader Khamenei. Prime Minister Modi has advised that military conflict
is not a solution to anything.
6) The price of Brent crude oil has crossed $ 82 per
barrel due to the war tension prevailing in the Middle East countries.
7) Deloitte has predicted that India's GDP growth will
be between 7.5% and 7.8% in the financial year 2025-26.
8) India has advanced to the final of the T20 World Cup
Cricket after defeating England.
Today in
History…
1) Today is the day Perarignar Anna was sworn in as the
Chief Minister of Tamil Nadu in 1967.
2) Today is the day Russian chemist Dmitri Mendeleev
submitted his first periodic table in 1869.
3) Today is the day world-famous Italian painter and
sculptor Michelangelo was born in 1475.
No comments:
Post a Comment