கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.03.2026
இன்று உலக வானிலை நாள்.
1) இன்று
முதல் மாநிலங்களுக்கு 20% கூடுதல் வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்களை ஒதுக்க மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
2) பெரும்
பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு
வழங்க உள்ளது.
3) ஹோர்முஸ்
நீர்ச்சந்தியை 48 மணி நேரத்திற்குள் முழுமையாகத் திறக்காவிடில் ஈரான் கடுமையான விளைவுகளை
எதிர்கொள்ள நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4) இந்தியப்
பெருங்கடலில் உள்ள அமெரிக்க – பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது
ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
5) ஹோர்முஸ்
நீர்ச்சந்தி மூடப்படும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்
ஒன்றுக்கு 115 டாலரைத் தாண்டியுள்ளது.
6) தமிழகத்தில்
மார்ச் 26 வரை வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை
ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வரலாற்றில் இன்று…
1) பகத்
சிங், சிவராம் ராஜகுரு மற்றும் சுக்தேவ் தாபர் ஆகிய மூவரும் பிரிட்டிஷ் அரசால் லாகூர்
சிறையில் 1931 இல் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று.
2) இந்தியத்
தொழில்துறையின் தந்தை என அழைக்கப்படும் ஜாம்செட்ஜி டாட்டா 1839 இல் பிறந்த தினம்.
3) இன்று
தேசிய நாய்க்குட்டிகள் தினம்.
Education & GK News
Today is
World Meteorological Day.
1) Starting today, the Central Government has decided to
allocate an additional 20% of commercial gas cylinders to the states.
2) The court is set to deliver its verdict today in the
Sathankulam father-son murder case, which had caused a massive sensation.
3) Donald Trump has warned that Iran will face severe
consequences if it does not fully reopen the Strait of Hormuz within 48 hours.
4) Iran has launched a missile attack on Diego Garcia, a
joint US-British military base located in the Indian Ocean.
5) Crude oil prices in the international market have
crossed the $115-per-barrel mark due to fears that the Strait of Hormuz might
be closed.
6) The Meteorological Department has warned that
temperatures in Tamil Nadu are likely to rise by up to 5 degrees Celsius above
normal levels until March 26.
Today in
History…
1) Today marks the day in 1931 when Bhagat Singh,
Shivaram Rajguru, and Sukhdev Thapar were executed by the British government in
Lahore Jail.
2) Today is the birth anniversary of Jamsetji Tata,
often hailed as the Father of Indian Industry, who was born in 1839.
3) Today is National Puppy Day.









No comments:
Post a Comment