Wednesday, 4 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.03.2026

இன்று சர்வதேச ஆயுதக் குறைப்பு விழிப்புணர்வு தினம்

1) இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (IISER) சேருவதற்கான IAT 2026 நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (மார்ச் 5) முதல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 கடைசி தேதியாகும்.

2) 2026-27 கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை இயக்கத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்துள்ளார். 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3) வளைகுடா போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், 149 பயணிகளுடன் துபாயில் இருந்து டெல்லிக்கு முதல் ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக வந்தடைந்தது.

4) அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி மேற்கொண்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

5) இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான் கப்பல் மீது மர்ம நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 101 பேர் மாயமாகியுள்ளனர்.

6) டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) காந்தி இர்வின் ஒப்பந்தம் 1931 இல் கையெழுத்தான தினம் இன்று.

2) இரஷ்யாவின் கம்யூனிசத் தலைவர் ஸ்டாலின் 1953 இல் மறைந்த தினம் இன்று.

3) மின்சார பேட்டரியைக் கண்டறிந்த அலெக்ஸாண்ட்ரோ வோல்டா 1827 இல் மறைந்த தினம் இன்று.

Education & GK News

Today is International Disarmament Awareness Day

1) Registration for the IAT 2026 entrance exam to join the Indian Institutes of Science Education and Research (IISER) begins today (March 5). The last date to apply for this is April 13.

2) Minister Anbil Mahesh Poyyamozhi has launched the government school admission drive for the academic year 2026-27. The target has been set to enroll more than 4 lakh students.

3) Amidst Gulf War tensions, the first Air India flight from Dubai to Delhi with 149 passengers arrived safely.

4) The US has officially announced that Iran attempted to assassinate President Trump.

5) 101 people have gone missing in a mysterious submarine attack on an Iranian ship in the Indian Ocean.

6) New Zealand has advanced to the final of the T20 World Cup cricket tournament by defeating South Africa.

Today in History…

1) Today is the day the Gandhi-Irwin Pact was signed in 1931.

2) Today is the day Russian communist leader Stalin died in 1953.

3) Today is the day Alessandro Volta, who discovered the electric battery, died in 1827.

No comments:

Post a Comment