கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.03.2026
1) தமிழகத்தில்
+2 பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.
2) வரும்
கல்வியாண்டு முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆளுமை மேம்பாடு மற்றும்
வாழ்க்கைத்திறன் உள்ளடக்கிய புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
3) மக்கள்
நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது எனத்
தெரிவித்துள்ளார்.
4) அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.
5) கூட்டணி
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, திமுக சுமார் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட
உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6) சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-க்கு கீழ் குறைந்துள்ளது.
7) அமெரிக்க
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போரை முடிக்க 15 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை
பாகிஸ்தான் மூலமாக ஈரானுக்கு அனுப்பியுள்ளார்.
வரலாற்றில் இன்று…
1) டாக்டர்
ஜோனாஸ் சால்க் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்ததாக 1953 இல் அறிவித்த
தினம் இன்று.
2) ரஷ்யாவின்
அதிபராக விளாடிமிர் புதின் முதன்முறையாக 2000 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று.
3) கவிஞர்
ராபர்ட் பிராஸ்ட் 1874 இல் பிறந்த தினம் இன்று.
4) கவிஞர்
வால்ட் விட்மன் 1892 இல் மறைந்த தினம் இன்று.
5) புகழ்
பெற்ற இசையமைப்பாளர் பீத்தோவான் 1827 இல் மறைந்த தினம் இன்று.
Education & GK News
1) The +2 public examinations in Tamil Nadu conclude
today.
2) Starting from the upcoming academic year, a new
curriculum incorporating personality development and life skills is set to be introduced
for students in classes 1 through 3.
3) Makkal Needhi Maiam President Kamal Haasan has
announced that his party will not contest the 2026 Assembly elections.
4) AIADMK General Secretary Edappadi Palaniswami has
released a preliminary list comprising 23 candidates.
5) Following alliance negotiations, reports indicate
that the DMK is poised to contest directly in approximately 175 constituencies.
6) In the international market, crude oil prices have
dropped below $100 per barrel.
7) US President Donald Trump has conveyed a 15-point
peace plan to Iran—via Pakistan—aimed at ending the conflict with the nation.
Today in
History…
1) Today marks the day in 1953 when Dr. Jonas Salk
announced his discovery of a vaccine against polio.
2) Today marks the day in 2000 when Vladimir Putin was
elected President of Russia for the first time.
3) Today marks the birth anniversary of the poet Robert
Frost, who was born in 1874.
4) Today marks the day in 1892 when the poet Walt
Whitman passed away.
5) Today marks the day in 1827 when the renowned
composer Beethoven passed away.

No comments:
Post a Comment