Tuesday, 3 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.03.2026

இன்று தேசிய பாதுகாப்பு தினம்

1) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2) பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியாகும்.

3) தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பள்ளிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

4) நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 8 ஆகும்.

5) மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.

6) தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) ஐயா ஸ்ரீ வைகுண்டர் 1833 இல் பிறந்த தினம் இன்று.

2) 1837 இல் சிகாகோ நகரம் உருவாக்கப்பட்ட தினம் இன்று.

3) 1961 இல் இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட தினம் இன்று.


Education & GK News

Today is National Security Day

1) Hall tickets for students appearing for the 10th standard public examination can be downloaded from today.

2) The results of the 12th standard public examination will be released on May 8 and the results of the 10th standard public examination will be released on May 10.

3) In view of the assembly elections in Tamil Nadu, it is planned to conduct the annual  examinations for schools in advance.

4) The last day to apply for the NEET exam is March 8.

5) The district-wise final voter list will be released today.

6) As the temperature has started to increase in many districts of Tamil Nadu, the Meteorological Department has said that there is a possibility of moderate rain in some districts.

Today in history…

1) Today is the birth anniversary of Sir Vaikundar in 1833.

2) Today is the anniversary of the founding of the city of Chicago in 1837.

3) Today is the anniversary of the commissioning of India's first aircraft carrier, INS Vikrant, in the Indian Navy in 1961.

No comments:

Post a Comment