கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.03.2026
1) இன்று
முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
2) வளைகுடா
போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகிப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
3) தமிழகத்தின்
பல மாநகரங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
4) தட்டுபாடு
காரணமாக வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளையை மட்டும் விநியோகம் செய்ய மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
5) எரிவாயு
உருளை தட்டுபாட்டால் உணவகங்களில் உணவின் விலை அதிகரித்துள்ளது. பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
6) சமையல்
எரிவாயு உருளையைப் பதுக்குபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இச்சட்டம் பதுக்கல்காரர்களுக்கு மூன்று மாதங்கள் முதல்
ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலானது.
7) ராமேஸ்வரம்
- மங்களூரு மற்றும் நெல்லை - மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளை பிரதமர்
நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
8) பிரதமர்
நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
9) பெட்ரோல்,
டீசல் தட்டுபாடு காரணமாக பாகிஸ்தானில் இரண்டு வாரங்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
10)
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வரலாற்றில் இன்று…
1) ஜப்பானில்
ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில்
2011 இல் பெரும் விபத்து ஏற்பட்ட தினம் இன்று.
2) உலக
சுகாதார நிறுவனம் (WHO), கோவிட்-19 வைரஸ் பரவலை அதிகாரப்பூர்வமாக ஓர் உலகளாவியப் பெருந்தொற்றாக
2020 இல் அறிவித்த தினம் இன்று.
3) பென்சிலினைக்
கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் 1955 இல் இயற்கை எய்திய தினம் இன்று.
Education & GK News
1) SSLC public exams start from today.
2) There is a shortage in the supply of cooking gas in
India due to the Gulf War.
3) The supply of gas cylinders for commercial use has
been stopped in many cities of Tamil Nadu.
4) Due to the shortage, the Central Government has
decided to supply only gas cylinders for domestic use.
5) The price of food in restaurants has increased due to
the shortage of gas cylinders. Many restaurants have closed.
6) The Central Government has warned that strict action
will be taken against those who hoard cooking gas cylinders under the ESMA Act.
This Act provides for imprisonment of three months to seven years for hoarders.
7) Prime Minister Narendra Modi will inaugurate 5 new
train services today, including the Rameswaram-Mangalore and Nellai-Mangalore
Express.
8) Prime Minister Narendra Modi is visiting Tamil Nadu
today.
9) Schools and colleges in Pakistan have been closed for
two weeks due to petrol and diesel shortage.
10) BCCI has announced a prize money of Rs 131 crore for
the Indian team that won the T20 World Cup.
Today in
history…
1) Today is the day when a major accident occurred at
the Fukushima nuclear power plant in 2011 due to a powerful earthquake and
tsunami in Japan.
2) Today is the day when the World Health Organization
(WHO) officially declared the spread of the Covid-19 virus a global pandemic in
2020.
3) Today is the day Alexander Fleming, who discovered
penicillin, passed away in 1955.







No comments:
Post a Comment