Monday, 16 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.03.2026

1) ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்கிருந்த 550 இந்தியர்கள் ஆர்மீனியா வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

2) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா கோரிய ராணுவ உதவிக்கு ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.

3) ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு அமெரிக்கத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4) வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5) 'புதிய வருமான வரிச் சட்டம் 2025' வரும் ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது.

6) எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

7) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த படம் உள்ளிட்ட 6 விருதுகளை 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம் வென்றுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனை கல்பனா சாவ்லா 1962 இல் பிறந்த தினம் இன்று.

2) இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 1990 இல் பிறந்த தினம் இன்று.

3) வங்கதேசத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் 1920 இல் பிறந்த தினம் இன்று.

Education & GK News

1) Due to the prevailing war tensions in Iran, 550 Indians were evacuated via Armenia and brought back to India.

2) Several European nations, including Germany, have refused the military assistance requested by the United States to reopen the Strait of Hormuz.

3) Reports indicate that Kharg Island—Iran's key oil terminal—has suffered severe damage in a U.S. attack.

4) The waiting period for booking domestic LPG cylinders has been increased from 21 days to 25 days.

5) The 'New Income Tax Act, 2025' is set to come into effect starting April 2026.

6) The Sahitya Akademi Award for this year has been announced for writer S. Tamilselvan.

7) At the Oscar Awards ceremony held in Los Angeles, the film ‘One Battle After Another’ won six awards, including Best Picture.

Today in History…

1) Today marks the birth anniversary of Kalpana Chawla, the first Indian woman to travel into space (born in 1962).

2) Today marks the birth anniversary of India's star badminton player, Saina Nehwal (born in 1990).

3) Today marks the birth anniversary of Sheikh Mujibur Rahman, revered as the Father of Bangladesh (born in 1920).

No comments:

Post a Comment