Friday, 27 March 2026

டெண்டர் ஓட்டு (Tendered Vote) என்றால் என்ன?

டெண்டர் ஓட்டு (Tendered Vote) என்றால் என்ன?

நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள். வரிசையில் நின்று, வியர்வை சிந்தி, ஒருவழியாக வாக்குச்சாவடி அலுவலர் முன்னால் போய் நிற்கிறீர்கள்.

"ஐயா! உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது!" என்கிறார் வாக்குச்சாவடி அலுவலர்.

உங்களுக்கு ஷாக். "நான் இப்போதுதான் வருகிறேன், அதற்குள் என் ஓட்டை யார் போட்டது?" இதுதான் நிஜமான 'அந்நியன்' மொமெண்ட்.

இங்கேதான் தேர்தல் விதி 49P உள்ளே நுழைகிறது. ஒருவர் உங்கள் பெயரில் கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுப் போயிருந்தால், உங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்ய தேர்தல் ஆணையம் தரும் ஒரு 'ஸ்பெஷல் சான்ஸ்' தான் இந்த டெண்டர் ஓட்டு.

இதற்கான விதிமுறைகள் எளிமையானவை.

நீங்கள் தான் அந்த ஒரிஜினல் ஆசாமி என்பதற்கு ஆதாரத்தைக் காட்ட வேண்டும். ஆதார், ஓட்டர் ஐடி போன்றவை அதற்கு உதவும்.

உங்களுக்கு இப்போது வாக்குரிமை உண்டு என்றாலும், நீங்கள் அந்த 'பீப்' சத்தம் வரும் மெஷினில் ஓட்டுப் போட முடியாது. உங்களுக்கு ஒரு பேலட் பேப்பர் (Ballot Paper) தருவார்கள்.

அதில் நீங்கள் விரும்பும் சின்னத்துக்கு முத்திரை குத்தி, மடித்து, ஒரு தனி கவரில் போட்டு வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.

அப்புறம் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த ஓட்டுகள் சாதாரணமாக எண்ணப்படாது. ஒரு தொகுதியில் வெற்றி, தோல்வி வித்தியாசம் மிகக் குறைவாக இருந்து, இந்த டெண்டர் ஓட்டுகள் முடிவைத் தீர்மானிக்கும் என்ற கட்டாயம் வந்தால் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி இவை பிரித்து எண்ணப்படும்.

சுருக்கமாச் சொன்னால், மெயின் பிக்சரில் இடம் கிடைக்காத போது கிடைக்கின்ற வெய்ட்டிங் லிஸ்ட் சீட் மாதிரி இது. ஆனால் உங்கள் வாக்குரிமை மறுக்கப்படவில்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

*****

No comments:

Post a Comment