Thursday, 12 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.03.2026

1) போரை நிறுத்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார். அவையாவன, ஈரானின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், எதிர்காலத்தில் மீண்டும் தாக்க மாட்டோம் என சர்வதேச உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

2) இந்தியாவின் எரிவாயு நிரப்பப்பட்ட கப்பலை ஹோர்முஸ் நீர்ச் சந்தி வழியாகக் கடக்க ஈரான் அனுமதித்தது. இதனால் விரைவில் இந்தியாவில் எரிவாயு தட்டுபாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4) பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார்.

5) மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

6) இந்தியாவின் 2025-26 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

7) பிப்ரவரி மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 3.21% ஆக உயர்ந்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ டயரை லண்டனில் இந்தியப் புரட்சியாளர் உத்தம் சிங் சுட்டுக் கொன்ற தினம் இன்று.

2) வில்லியம் ஹெர்ஷல் சூரிய குடும்பத்தின் ஏழாவது கோளான யுரேனஸை 1781 இல் கண்டுபிடித்த தினம் இன்று.

3) ஆக்சிஜனைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிரிட்டிஷ் வேதியியலாளர் ஜோஸப் பிரிஸ்ட்லீ 1733 இல் பிறந்த தினம் இன்று.





Education & GK News

1) Iranian President Masoud Pezeshkian has laid down three conditions to stop the war. These are: Iran's rights must be recognized; compensation must be provided for damages caused by the war; and an international guarantee must be given that no further attacks will be launched in the future.

2) Iran has permitted an Indian vessel carrying gas cargo to pass through the Strait of Hormuz. Consequently, it is expected that the gas shortage in India will be alleviated soon.

3) The Central Government has stated that there is no likelihood of a petrol or diesel shortage occurring in India.

4) Prime Minister Narendra Modi is visiting the state of Assam today.

5) Prime Minister Modi held a telephonic conversation with the Iranian President regarding the prevailing war situation in West Asia.

6) India's economic growth for the 2025-26 fiscal year is estimated to be 7.6%.

7) Retail inflation for the month of February has risen to 3.21%.

On This Day in History…

1) Today marks the day when Indian revolutionary Udham Singh shot and killed Michael O'Dwyer—the Governor of Punjab responsible for the Jallianwala Bagh massacre—in London.

2) Today marks the day in 1781 when William Herschel discovered Uranus, the seventh planet of the solar system.

3) Today marks the birthday of British chemist Joseph Priestley—one of the discoverers of oxygen—who was born in 1733.

No comments:

Post a Comment