வேகம் என்பது ஒரு போலி கௌரவம்!
நவீன
வாழ்க்கையில் ஒரு விசித்திரமான நோய் பரவியிருக்கிறது. எப்போதும் எதையோ துரத்திக் கொண்டிருக்கிறோம்.
நம் To-do லிஸ்ட்டில் டிக் அடிப்பதையே ஒரு சாதனையாக நினைக்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கேன்
சார் என்று சொல்வதைப் பெருமை தரும் ஒரு பேட்ஜ் போல அணிந்து கொள்கிறோம்.
உண்மையில்
நாம் வாழ்வது ஆட்டோ பைலட் மோடு. நமக்கே தெரியாமல் மெஷினாக மாறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த
ஓட்டப்பந்தயத்திற்கு ஒரு ஆன்டிடோட் வந்திருக்கிறது. அதன் பெயர் ஸ்லோ லிவிங் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
சிலர்
நினைக்கிறார்கள், ஸ்லோ லிவிங் என்றால் சோம்பேறித்தனம் என்று. அதுதான் இல்லை. இது நேரத்தை
வீணடிப்பது அல்ல, உங்களை மீட்டெடுப்பது.
அவசியமற்ற
விஷயங்களை டெலீட் செய்துவிட்டு, உண்மையில் உங்களுக்குப் பிடித்த, முக்கியமான விஷயங்களுக்கு
ஸ்பேஸ் ஒதுக்குவதுதான் இதன் அடிப்படை. ஒரு காரியத்தை அவசரமாகச் செய்வதை விட, அழகாகச்
செய்வதுதான் இதன் நோக்கம்.
ஸ்லோ
லிவிங்கிற்கு என்று தனி ஆபீஸோ, தலைவரோ கிடையாது. ஆனால், இதைப் பின்பற்றுபவர்கள் சில
பொதுவான விதிகளை வைத்திருக்கிறார்கள்.
வேகமான
வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் ஒரு பதற்றம் இருக்கும். ஆனால் ஸ்லோ லிவிங், அந்தப் பதற்றத்தை
விடுத்து நிகழ்காலத்தை ரசிக்கச் சொல்கிறது. இதுதான் அந்த மைண்ட்ஃபுல்னஸ். இது முதல்
விதி.
ஓடிக்கொண்டே
இருப்பவர்களுக்கு யாருடனும் பேச நேரமிருக்காது. ஸ்லோ லிவிங் என்பது உங்கள் உறவுகளுக்கு,
உங்கள் விருப்பமான ஹாபிக்களுக்கு, மற்றும் இயற்கைக்கு நேரம் ஒதுக்குவதை முக்கியமாகக்
கருதுகிறது. இது ஒரு இனிமையான பிணைப்பை உருவாக்குகிறது. இது இரண்டாம் விதி.
மொத்தத்தில்
வேகமாக ஓடும் ரயிலில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்தால் மரங்கள் எல்லாம் பச்சைக்கோடாகத்தான்
தெரியும். ரயில் மெதுவாகப் போகும்போதுதான் அது தென்னை மரம், இது அரச மரம் என்று அடையாளம்
தெரியும். வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.
பிஸியாக
இருப்பது கௌரவம் அல்ல, நிம்மதியாக இருப்பதுதான் சௌகரியம்! இதுதான் ஸ்லோ லிவ்விங் சொல்ல
வரும் நியதி.
இது
உங்களுக்குப் பொருந்துமா? இது உங்களுக்கு வேண்டுமா? அதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
*****

No comments:
Post a Comment