Wednesday, 11 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.03.2026

1) நேற்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9.09 லட்சம் மாணவர்கள் எழுதினர். சுமார் 11,898 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2) தமிழகப் பள்ளிகளில் வரும் ஆண்டுகளில் ஆறாம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

3) எரிவாயு தட்டுபாட்டால் 30 சதவீதம் மின்சார அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

4) தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை ராஜ்பவனில் பதவியேற்கிறார்.

5) மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

6) கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தனது கையிருப்பில் இருந்து 172 மில்லியன் பேரல் எண்ணெயை வெளியிட முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாகிரகத்தை 1930 இல் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய தினம் இன்று.

2) www என்பதற்குக் காரணமான இணைய மேலாண்மைக்கான தனது முதல் திட்ட அறிக்கையை டிம் பெர்னர்ஸ் லீ 1989 இல் சமர்ப்பித்த தினம் இன்று.

3) 1993 இல் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300 பேர் இறந்த தினம் இன்று.






Education & GK News

1) About 9.09 lakh students wrote the Class 10th public examination that began yesterday. According to reports, about 11,898 students did not appear for the examination.

2) It is planned to introduce subjects related to artificial intelligence from Class 6 onwards in Tamil Nadu schools in the coming years.

3) Sales of electric stoves have increased by 30 percent due to gas shortage.

4) Rajendra Vishwanath Arlekar will take oath as the Additional Governor of Tamil Nadu at the Raj Bhavan in Chennai today.

5) The Union Cabinet has approved granting international airport status to Madurai Airport.

6) The United States has decided to release 172 million barrels of oil from its reserves to control crude oil prices.

Today in history…

1) Today is the day Mahatma Gandhi started his famous Salt Satyagraha from Sabarmati Ashram in Ahmedabad in 1930.

2) Today is the day Tim Berners-Lee submitted his first project report for the management of the Internet, which gave rise to www, in 1989.

3) Today is the day around 300 people died in the Mumbai serial blasts in 1993.

No comments:

Post a Comment