உயர் தொடக்க நிலை மெல்ல மலர்வோர்க்கான
ஜூலை மாத கணித வாராந்திரப் பயிற்சி – 1
கணக்கு என்றால் எண்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாகும்.
எண்களிலிருந்து கணிதம் உருவாகிறது. எண்களில் மாணவர்கள் நல்ல பயிற்சி பெற்றிருப்பது
கணிதக் கற்றலுக்கு வலுவான அடித்தளமாகும்.
மெல்ல மலரும் மாணவர்கள் எண்களை வரிசைக்கிரமாகச் சொல்வதிலும்
எழுதுவதிலும் சிரமப்படுவர். அவர்களுக்கு எண்களைச் சொல்வதிலும் எழுதுவதிலும் பன்முறை
முயற்சி அளிப்பது அவசியம் ஆகும்.
எண்களில் அவர்களுக்குக் கீழ்கண்ட வகையில் சொல்லவும் எழுதவும்
பயிற்சி அளித்தல் பயனுள்ளதாகும். இப்பயிற்சியினை மெல்ல மலரும் உயர் தொடக்கநிலை மாணவர்களுக்கான
முதல் வாரப் பயிற்சியாக வழங்கலாம்.
வ. எண் |
பயிற்சி |
1. |
1 முதல் 100 வரை எண்களை வரிசைக்கிரமாகச் சொல்லுதல் மற்றும் எழுதுதல். |
2. |
1 முதல் 100 வரை தழைகீழாக எண்களைச் சொல்லுதல் மற்றும் எழுதுதல். |
3. |
1 முதல் 100 வரை ஒற்றை எண்களைச் சொல்லுதல் மற்றும் எழுதுதல். |
4. |
1 முதல் 100 வரை இரட்டை எண்களைச் சொல்லுதல் மற்றும் எழுதுதல். |
5. |
1 முதல் 100 வரை எண்களை ஐந்து ஐந்தாகச் சொல்லுதல் மற்றும் எழுதுதல். |
6. |
1 முதல் 100 வரை எண்களைப் பத்துப் பத்தாகச் சொல்லுதல் மற்றும் எழுதுதல். |
7. |
ஒரு குறிப்பிட்ட எண்ணில் தொடங்கி இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நந்நான்காக,
ஐந்து ஐந்தாக, ஆறு ஆறாக, ஏழு ஏழகா, எட்டு எட்டாக, ஒன்பது ஒன்பதாக, பத்து பத்தாக நூறு
வரைக் கூட்டிச் செல்லுதல். (எ.கா.) 6, 8, 10, 12, 14, …. 3, 6, 9, 12, 15, … 4, 8, 12, 16, 20, …. 5, 10, 15, 20, 25, … 6, 12, 18, 24, 30, … 7, 14, 21, 28, 35, … 8, 16, 24, 32, 40, … 9, 18, 27, 36, 45, … 10, 20, 30, 40, 50, … 12, 22, 32, 42, 52, … |
*****
No comments:
Post a Comment