கணித தினங்களைக் கொண்டாடுவோமே!
முக்கிய கணித தினங்களைப்
பள்ளிகளில் கொண்டாடுவதன் மூலமாக மாணவர்களின் கணித ஆர்வத்தையும் கணித ஆய்வு மனப்பான்மையையும்
அதிகரிக்க முடியும். சில முக்கிய கணித தினங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வ.எண் |
நாள் |
கணித தினம் |
1. |
பிப்ரவரி 7 |
‘இ’ (e – Euler’s Number) தினம் |
2. |
மார்ச் 14 |
‘பை’ (Pi) தினம் |
3. |
ஜூன் 28 |
‘டௌ’ (Tau) தினம் |
4. |
ஜூலை 8 |
கணித 2.0 தினம் |
5. |
நவம்பர் 23 |
பிபனோசி தினம் |
6. |
டிசம்பர் 22 |
தேசிய கணித தினம் |
இவைத் தவிர பிதாகரஸ்
தேற்ற தினம், வர்க்கமூல தினம், பாலின்ட்ரோம் தினம் போன்றவற்றையும் கொண்டாடலாம். ஆனால்
அவற்றுக்கான தினங்கள் மிக அரிதாகவே வரும். ஆண்டுதோறும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
இனி அந்தத் தினங்கள் குறித்தும் சிறிது காண்போம்.
05.12.13 அன்றைய தினத்தைப்
பிதாகரஸ் தினமாகக் கொண்டாடியிருப்போம். காரணம் நாள் – மாதம் – ஆண்டு என்று வரும் அந்த
மூன்று எண்களும் பிதாகரஸ் மூன்றன் தொகுதியைச் சேர்ந்த எண்கள் அல்லவா. 16.12.20 அன்றைய
தினமும் பிதாகரஸ் தேற்ற தினம்தான். ஏனென்றால் 16, 12, 20 ஆகிய மூன்று எண்களும் பிதாகரஸ்
மூன்றன் தொகுதியைச் சேர்ந்த எண்கள்தானே. அடுத்ததாக நாம் பிதாகரஸ் தேற்ற தினத்தைக் கொண்டாட
வேண்டுமானல் நாம் 2025 வரை காத்திருந்து 24.07.25 அன்று கொண்டாடலாம்.
வர்க்கமூல தினத்தை நாம்
04.04.16 இல் கொண்டாடியிருப்போம். அடுத்த வர்க்கமூல தினத்தைக் கொண்டாட வேண்டுமானால்
நாம் 2025 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். 05.05.25 அன்று நாம் அந்தத் தினத்தைக்
கொண்டாடலாம். அப்போதுதானே 25 என்ற வர்க்க எண்ணின் வர்க்க மூலமாக நாளும் மாதமும் வரும்.
அதற்கடுத்த வர்க்க மூல தினத்தைக் கொண்டாட வேண்டுமானால் 2036 வரை காத்திருந்து
06.06.2036 இல் கொண்டாடலாம்.
22.02.2022 இல் நாம் பாலின்ட்ரோம்
தினத்தைக் கொண்டாடியிருப்போம். இதே போன்ற அடுத்த பாலின்ட்ரோம் தினத்திற்காக நாம்
03.02.2030 வரை காத்திருக்க வேண்டும். dd/mm/yy வடிவிலான பாலின்ட்ரோம் தினங்களையும்
நாம் கருத்தில் கொள்ளலாம். உதாரணம் 22.11.22.
*****
No comments:
Post a Comment