Tuesday 28 February 2023

சீனிவாச ராமானுஜம் குறித்த கணிதத் திரைப்படங்கள்

சீனிவாச ராமானுஜம் குறித்த கணிதத் திரைப்படங்கள்

கணிதம் தொடர்பான திரைப்படங்கள் மாணவர்களின் கணித ஆர்வத்தைத் தூண்ட வல்லவை. இத்திரைப்படங்களை மாணவர்களைக் காண செய்வதன் மூலம் மாணவர்களின் கணித ஆர்வத்தைத் தூண்ட முடியும். இத்திரைப்படங்கள் மாணவர்களுக்குக் கணித மேதைகளாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டாக்கும்.

முதலில் இந்திய கணித மேதையான சீனிவாச ராமானுஜம் குறித்த திரைப்படங்களைக் காண்போம். கணித மேதை என்றால் நம் அனைவரின் நினைவுக்கு வருபவரும் அவர்தானே.

சீனிவாச ராமானுஜம் பிறந்த நாளான டிசம்பர் 22 தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்டவர் குறித்து நாம் அறிந்து கொள்ள இத்திரைப்படங்கள் உதவும்.

சீனிவாச ராமானுஜம் குறித்த மூன்று திரைப்படங்களை யூடியூப்பில் காண இயலும்.

Ø முதல் திரைப்படம் ஞான ராஜசேகரன் இயக்கிய நேரடித் தமிழ்த் திரைப்படம்.

Ø இரண்டாவது ‘The man who knew infinity’ என்ற ஆங்கிலத் திரைப்படம்.

Ø மூன்றாவது ‘The man who knew infinity’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கப் படம்.

இம்மூன்று திரைப்படங்களுமே சீனிவாச ராமனுஜம் குறித்த நல்ல புரிதலையும் கணித ஆய்வுகள் குறித்த ஆர்வத்தையுத் தர வல்லவை.

ஞான ராஜசேகரன் இயக்கிய சீனிவாச ராமானுஜம் குறித்த தமிழ்ப் படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://youtu.be/zx6QsOdA4cQ

சீனிவாச ராமானுஜம் குறித்த ‘The man who knew infinity’ என்ற ஆங்கிலப் படத்தைக் காண (Play செய்யவும்) …

சீனிவாச ராமானுஜம் குறித்த ‘The man who knew infinity’ என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் மொழியாக்கத்தைக் காண (Play செய்யவும்) …

*****

No comments:

Post a Comment