கற்பித்தலைச் சிறப்பாக்க…
கற்பித்தலைச் சிறப்பாக்க
பின்வரும் வழிமுறைகளை ஆசிரியர்கள் கையாள்வது எப்போதும் பயன் தரக் கூடியதாகும். அவ்வழிமுறைகளாவன,
1. ஆர்வத்தைத் தூண்டுவது
இது எப்போதும் முக்கியமானது.
மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டாமல் செய்யப்படும் கற்பித்தல் – கற்றல் செயல்முறைகள் விழழுக்கு
இறைத்த நீராகி விடும்.
2. சிந்திக்கத் தூண்டுவது
வகுப்பறையில் செயல்படுத்திய
கற்றல் – கற்பித்தலைச் சிந்திக்குமாறு செய்ய வேண்டும். மாணவர்கள் சிந்திக்கும் போதுதான்
அவர்கள் கற்ற பாடப்பொருள் அவர்களின் மனதில் நன்கு பதிய வாய்ப்புகள் உண்டாகின்றன.
3. அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் காட்டுவது
எந்தப் பாடமாக இருந்தாலும்
அப்பாடக் கருத்துகளை மாணவர்களின் அன்றாட வாழ்க்கையோடும் நடைமுறை நிகழ்வுகளோடும் தொடர்புபடுத்திக்
காட்டும் போதுதான் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடப்பொருளை அணுகுவர். அதற்கேற்ப ஆசிரியர்
பாடப்பொருளுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்பை விளக்கிக் காட்டும் வகையில்
கற்பித்தலைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
4. ஒருங்கிணைத்துக் காட்டுவது
ஆசிரியர் தமது பாடக்கருத்துகளை
மற்றப் பாடங்களின் கருத்துகளோடு ஒருங்கிணைத்துக் காட்டுவது அவசியமாகும். இவ்வித ஒருங்கிணைப்பானது
தொடர்புபடுத்தி பாடப்பொருளைக் கற்க மாணவர்களை ஊக்குவிக்கும்.
5. அடிக்கடி ஊக்குவிப்பது மற்றும் பாராட்டுவது
ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களைப்
பஞ்சமில்லாமல் பாராட்ட வேண்டும். சிறு முயற்சிக்கும் ஊக்குவிக்க வேண்டும். மிகையாகப்
பாராட்டுவதும் ஏற்கதக்கதே. குழந்தைகள் அன்புக்கும் பாராட்டுக்கும் ஏங்குபவர்கள் என்பதை
ஆசிரியர்கள் எப்போதும் மறந்து விடல் ஆகாது. மாணவர்களின் மனம் தளர்ந்து விடாமல் அவர்களின்
கற்றல் குறைபாடுகளையும் பின்னடைவுகளையும் கையாள வேண்டும். குறைபாடுகளை ஒருபோதும் சுட்டிக்
காட்டாமல் அவர்களின் சிறப்பான முயற்சிகளை மட்டும் அடிக்கடி சுட்டிக் காட்ட வேண்டும்.
கற்றலில் பின்னடைவுகள் சகஜமானவை என்பதை உணர வைத்து பின்னடைவைப் போக்கிக் கொள்ள விடாமுயற்சியும்
ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஊட்ட வேண்டும்.
*****
No comments:
Post a Comment