ஊதியக்குழுக்கள் (சம்பளக் கமிஷன்கள்)
- ஒரு பார்வை
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒரு முறை ஊதியக்குழு (சம்பளக்
கமிஷன்) அமைக்கப்பட்டு அரசு ஊழியர்களின் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படுகிறது.
இதுவரை 7 ஊதியக்குழுக்கள் (சம்பளக் கமிஷன்கள்) அமைக்கப்பட்டு
ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஊதியக்குழு (சம்பளக் கமிஷன்) எட்டாவது ஊதியக்குழு
(சம்பளக் கமிஷன்). எட்டாவது ஊதியக் குழுவின் (சம்பளக் கமிஷன்) பரிந்துரைகள்
01.01.2026 இல் நடைமுறைக்கு வரும்.
தமிழக அரசு ஊழியர்களைப் பொருத்த வரை அது ஒன்பதாவது
ஊதியக்குழு (சம்பளக் கமிஷன்) ஆகும். எப்படியென்றால்,
முதல் ஊதியக்குழு (சம்பளக்
கமிஷன்) |
01.06.1960 |
இரண்டாவது ஊதியக்குழு
(சம்பளக் கமிஷன்) |
02.10.1970 |
மூன்றாவது ஊதியக்குழு
(சம்பளக் கமிஷன்) |
01.04.1978 |
நான்காவது ஊதியக்குழு
(சம்பளக் கமிஷன்) |
01.10.1984 |
ஐந்தாவது ஊதியக்குழு (சம்பளக்
கமிஷன்) |
01.06.1988 |
ஆறாவது ஊதியக்குழு (சம்பளக்
கமிஷன்) |
01.01.1996 |
ஏழாவது ஊதியக்குழு (சம்பளக்
கமிஷன்) |
01.01.2006 |
எட்டாவது ஊதியக்குழு (சம்பளக்
கமிஷன்) |
01.01.2016 |
மேற்காணும் அட்டவணையில் இதுவரை
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊதியக்குழுக்களின் (சம்பளக் கமிஷன்) விவரம் உள்ளது.
அதன்படி இனி அமல்படுத்தப்படும் ஊதியக்குழு (சம்பளக் கமிஷன்) தமிழக அரசு ஊழியர்களுக்கு
ஒன்பதாவது ஊதியக்குழுவாக (சம்பள கமிஷனாக) அமையும்.
மத்திய அரசு அமைத்த ஊதியக்குழுக்களின் (சம்பளக்
கமிஷன்) அடிப்படையில் தமிழக அரசு அப்படியேவோ அல்லது ஒரு சில மாறுதல்களோடு ஊதியக்குழு
(சம்பளக் கமிஷன்) பரிந்துரைகளை அமல்படுத்துகிறது.
மத்திய அரசின் ஊதியக்குழுவின் (சம்பளக் கமிஷன்)
அடியொற்றியே தமிழக அரசின் ஊதியக்குழுவின் (சம்பளக் கமிஷன்) பரிந்துரைகளும் அமையும்.
ஒரு சில மாறுதல்கள் இருக்கலாம்.
மத்திய அரசின் ஊதியக்குழுக்கள்
(சம்பளக் கமிஷன்கள்) ஒவ்வொன்றாலும் பல்வேறு நன்மைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க
சிலவற்றைக் காண்போம்.
முதலாவது ஊதியக்குழுவிற்குப் (சம்பளக் கமிஷன்) பிறகுதான்
ஊழியர்களின் குடும்பங்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் (குடும்ப பென்ஷன்) கிடைக்க ஆரம்பித்தது.
மூன்றாவது ஊதியக்குழு மத்திய அரசு அறிவிக்கும் தேதியிலேயே
தமிழக அரசு ஊழியர்களுக்கும் தேர்வு நிலை – சிறப்பு நிலை தந்தது. இந்த ஊதியக்குழுவில்தான்
(சம்பளக் கமிஷன்) 6 ரூபாயாக இருந்த குடும்ப
ஓய்வூதியம் (குடும்ப பென்சன்) 100 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 30% குடும்ப ஓய்வூதியமும்
(குடும்ப பென்சனும்) நடைமுறைப்படுத்தப்பட்டது.
நான்காவது ஊதியக் குழுவில்தான் (சம்பளக் கமிஷன்)
ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் சமமான அகவிலைப்படி வழங்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பள விகிதத்தைத்
தந்தது ஐந்தாவது ஊதியக்குழு (சம்பளக் கமிஷன்) ஆகும்.
ஏழாவது ஊதியக்குழு (சம்பளக் கமிஷன்) பணிக்கொடையை
(கம்யூட்டேஷன்) அதிகப்படுத்தி வழங்கியது. அந்த ஊதியக் குழுவின் ஊதிய நிர்ணய காரணி
2.57 ஆக அமைந்தது.
எட்டாவது ஊதியக்குழுவின் (சம்பளக் கமிஷன்) ஊதிய
நிர்ணய காரணி 1.96 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
*****
No comments:
Post a Comment