Wednesday, 22 February 2023

அறிய வேண்டிய உயர்கல்வி படிப்புகள் (உயர்கல்வி படிப்புகள் பலவிதம்)

அறிய வேண்டிய உயர்கல்வி படிப்புகள்

உயர்கல்வி படிப்புகள் பலவிதம்

உயர்கல்வி குறித்து முகநூலிலும் புலனத்திலும் வெளிவந்த இத்தகவல் பல விதங்களில் பயனுடையது என்று கருதுகிறேன். மருத்துவம் மற்றும் பொறியியலை மட்டும் உயர்கல்விக்கான படிப்பாக நினைக்கும் மனப்போக்கை மாற்றிக் கொள்ளும் வகையில் இப்பகிர்வு தந்த செய்திகள் அமைந்திருந்தன. மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களுக்கு வழிகாட்ட நினைப்பவர்களும் இப்பதிவை அவசியம் ஒருமுறை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் பல மாநிலங்களில் "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரில் பதின்மூன்று பல்கலைக்கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.

இது போக,

1)      அஸ்ஸாம் பல்கலைக்கழகம், சில்சார், அஸ்ஸாம் மாநிலம், 

2)      பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலைக்கழகம், ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம்,

3)      பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,

4)      காலிக்கோட் பல்கலைக்கழகம், பேரம்பூர் ஒடிஸா மாநிலம்,

5)      சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர்

என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

பொதுவாக இந்தப்  பல்கலைக்கழகங்களைப் பற்றிய விவரங்கள் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது. அவையாவன,

1)      Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences),

2)      Integrated MA (Economics)

இது போக

1)      மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும்,

2)      எம்.பி.ஏ. கோர்ஸுகளும்,

3)      பி.எச்.டி. கோர்ஸுகளும் உள்ளன.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் அடங்கி விடும்.

ஆண்கள் பெண்களுக்கு  தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவாகவே உள்ளது.

இந்த 18 மத்திய பல்கலை கழகங்களில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது. 

அதன் பெயர் cucetexam என்பதாகும். அதாவது Central University common entrance exam என்பதன் சுருக்கம்.

இந்நுழைவுத் தேர்வில் பங்கேற்க +2 முடித்து 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குக் கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்குத் தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றது.

இத்தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு குறித்த அனைத்து விவரங்களும், எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்ற விவரங்களும் இணையதளத்தில் அடங்கியுள்ளது.  

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு விளக்கம் பெறவும்  011 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு மாநில வாரியாக

மாநிலம்

தொடர்பு எண்

அசாம்

9476897510, 9401847943

ஆந்திரப்பிரதேசம்

9640884806, 7598413970

குஜராத்

079 23977446

அரியானா

9212884894

ஜம்மு

8082197957, 9796665505, 8178118948

ஜார்கண்ட்

7070630510

கர்நாடகா

9972191661, 9242355484

கேரளா

0467 2309467, 0467 2309460

பஞ்சாப்

9464269330

இராஜஸ்தான்

7014588311

தெற்கு பீகார்

0631 2229514, 2229518

தமிழ்நாடு

04366 277337

எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

cucet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.

மேலும் தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்.

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.

மத்திய பல்கலைழக்கழக நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 10, 2023 கடைசி நாளாகும். மேலும் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 www.cuet.samarth.ac.nic.in

*****

No comments:

Post a Comment