Monday, 20 February 2023

ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழாக்களின் பெயர்கள்

ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழாக்களின் பெயர்கள்

            ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழாக்கள் குறித்த பெயர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா, பவள விழா என்று பெயர்களில் விழாக்களைக் கேள்விபட்டிருப்போம், அழைப்பிதழ்களைப் பார்த்திருப்போம். ஒவ்வொரு விழாவும் இத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடுவதற்காகக் கொண்டாடப்படுகிறது என்ற இத்தகவல் உங்களையும் ஆச்சரியப்படுத்தும்.

1ஆம்  ஆண்டு நிறைவு விழா

காகித விழா

2 ஆம் ஆண்டு நிறைவு விழா

பருத்தி /பஞ்சு விழா

3 ஆம் ஆண்டு நிறைவு விழா

தோல் விழா

4 ஆம் ஆண்டு நிறைவு விழா

பூ விழா

5 ஆம் ஆண்டு நிறைவு விழா

மர விழா

6 ஆம் ஆண்டு நிறைவு விழா

சர்க்கரை / கற்கண்டு விழா

7 ஆம் ஆண்டு நிறைவு விழா

கம்பளி / செம்பு விழா

8 ஆம் ஆண்டு நிறைவு விழா

வெண்கல விழா

9 ஆம் ஆண்டு நிறைவு விழா

மண்கல விழா

10 ஆம்  ஆண்டு நிறைவு விழா

தசாப்த விழா

15 ஆம் ஆண்டு நிறைவு விழா

படிக விழா

20 ஆம் ஆண்டு நிறைவு விழா

பீங்கான் விழா

25 ஆம்  ஆண்டு நிறைவு விழா

வெள்ளி விழா

30 ஆம் ஆண்டு நிறைவு விழா

முத்து விழா

40 ஆம் ஆண்டு நிறைவு விழா

மாணிக்க விழா

45 ஆம் ஆண்டு நிறைவு விழா

நீலக்கல் / இரத்தின விழா

50 ஆம்  ஆண்டு நிறைவு விழா

பொன் விழா

55  ஆம் ஆண்டு நிறைவு விழா

மரகத விழா

60 ஆம்  ஆண்டு நிறைவு விழா

வைரவிழா / மணிவிழா

75 ஆம்  ஆண்டு நிறைவு விழா

பவள விழா

80 ஆம்  ஆண்டு நிறைவு விழா

அமுத விழா

100 ஆம்  ஆண்டு நிறைவு விழா

நூற்றாண்டு விழா

******

 

No comments:

Post a Comment