Thursday, 23 February 2023

மண்டல அளவிலான குழு பார்வையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மண்டல அளவிலான குழு பார்வையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மண்டல அளவிலான குழு பார்வையின் போது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

1. காலை வழிபாட்டுக் கூட்டம்

அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப் பண் பிழையின்றிப் பாடுவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய செய்தி ( தமிழ் & ஆங்கிலம்), திருக்குறள் & பழமொழி அதன் விளக்கம் , ஆசிரியர் உரை இடம்பெறுதல் வேண்டும்.

2. பள்ளி வளாகம்

பள்ளி வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.

குப்பைகளை எரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படின் அதற்காக பள்ளி வளாகத்தில் Cement RCC Rings பயன்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் தேவையற்ற பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்

3. வகுப்பறைகள்

வகுப்பறைகள் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு குப்பைத் தொட்டி இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மிதியடிகள் வகுப்பிற்கு வெளியே வரிசையாக விடப்பட்டிருக்க வேண்டும்.

காற்றோட்டமான போதிய வெளிச்சத்துடன் கூடிய வகுப்பறையாக இருக்க வேண்டும்.

TLM மற்றும் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

கரும்பலகைகள் (கீழ்மட்டக் கரும்பலகைகள் உட்பட) வண்ணம் தீட்டப்பட்டு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

மின்சாதனப் பொருட்கள் மற்றும் மின் இணைப்புகள் உரிய பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. கழிவறைகள்

மாணவர்கள் அனைவரும் கழிவறையை பயன்படுத்தும் வகையில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தினந்தோறும் தூய்மைப்படுத்தப்பட்டுத் தண்ணீர் வசதியுடன் இருக்க வேண்டும்.

5. ஆசிரியர் செயல்பாடு

அனைத்து மாணவர்களும் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வருகை புரிவதை ஆசிரியர் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

முறையாக வருகை புரியாத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

பாடக்குறிப்பு மற்றும் கற்பித்தல் துணைக்கருவிகள் துணையுடன் வகுப்பு எடுக்க வேண்டும்.

எண்ணும் எழுத்தும், படைப்பாற்றல் கற்பித்தல் முறை என அந்தந்த வகுப்புகளுக்கு உரிய முறையில் வகுப்புகளை எடுக்க வேண்டும்.

மாணவர்களுடன் கலந்துரையாடுதல், கேள்வி கேட்டல், மதிப்பீடு செய்தல், பாடப் பொருளைப் புரியும் வகையில் கற்பித்தல், கற்றல் விளைவுகளின் அடிப்படையில் கற்பித்தலை அமைத்திருத்தல் ஆகியவற்றுக்குக் கற்பித்தலின் போது ஆசிரியர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மாணவர்களின் குறிப்பேடுகள், கட்டுரை ஏடுகள் போன்றவற்றை முறையாக அவ்வப்பொழுது திருத்தித் தேதியுடன் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.

6. பதிவேடுகள்

பள்ளியின் அனைத்து பதிவேடுகளும்  புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

7. எண்ணும் எழுத்தும்

களங்கள் முறையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தந்த வாரத்திற்கான செயல்பாடுகள் ( TLM) புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர் கையேட்டின் அடிப்படையில் வகுப்பறைச் செயல்பாடு அமைய வேண்டும்.

பயிற்சி ஏடுகளில் மாணவர்கள் முறையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

8. SALM

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இம்முறையில் பாடம் கற்பிக்கப்பட வேண்டும். Trays முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

9. ALM

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையில் பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

புதிய வார்த்தைகள் ,மன வரைபடம், தொகுத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

10. கட்டுரை ஏடு

மாதத்திற்கு ஒரு கட்டுரையென எழுதப்பட்டு ஆசிரியரால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தேதியுடன் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.

கட்டுரைகளைக் கரும்பலகையில் எழுதிப் போட்டு அதனை அப்படியே மாணவர்களை எழுதச் செய்யக்கூடாது. முதலில் தலைப்பினை தெரிவித்து அது சம்பந்தமாக மாணவர்களுக்கு தெரிந்த கருத்துகளை எழுதி வரச் செய்து திருத்தம் செய்து அதன் பிறகு கூடுதல் தகவல் அளித்து மனப்பாடம் செய்து வரச் சொல்லி அதன் பிறகு கட்டுரை ஏடுகளில் எழுதச் செய்திருக்க வேண்டும்.

11. மெல்லக் கற்கும் மாணவர்கள்

நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கென உரிய பயிற்சி ஏடுகள், பதிவேடுகள் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். Bridge Course Books பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

செயல் திட்டம் அமைத்து மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு & எழுத்தறிவு மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

12. STEM

வானவில் மன்றச் செயல்பாடுகளை முறையாக செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

13. ITK

இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு  ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் செல்வதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

14. GRANTS

பள்ளியின் தேவையின் அடிப்படையில் மற்றும் செய்லமுறைகளில் தெரிவித்துள்ளவாறு SNA மூலம் செலவினம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

SMC கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே செலவினம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளியின் பெயர்ப் பலகை புதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அறிவிப்பு பலகையில் நிதி வரவு  விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

புதிய பொருட்கள் வாங்கப்பட்டிருப்பின் இருப்பு பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும்.

15. EMIS

ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு தினந்தோறும் முறையாக குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Library books, PSTM ஆகிய அனைத்து விவரங்களும் அவ்வப்பொழுது பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக ஆதார் எண் பெற முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் மண்டல அளவிலான குழு பார்வையின் போது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்வது நலமாகும்.

*****

No comments:

Post a Comment