Saturday, 31 January 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.02.2026)

1) 27 ஆண்டுகளுக்குப் பின் இன்று ஞாயிற்றுக் கிழமையில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

2) புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் கூடுதல் கலால் வரி அமலாகிறது.

3) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 22.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

4) பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலத்திற்குச் செல்கிறார்.

5) சுநேத்ரா பவார் மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் ஆனார்.

6) தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்தது.

வரலாற்றில் இன்று…

1) இன்று கடலோரக் காவல்படை தினம்

2) 1884 இல் முதன் முதலில் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி வெளியிடப்பட்ட தினம் இன்று.

3) 2003 இல் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லா மறைந்த தினம் இன்று.

Education & GK News

1) After 27 years, on a Sunday, Nirmala Sitharaman is presenting the Union Budget today.

2) Additional excise duty on tobacco products comes into effect from today.

3) 22.83 lakh people have applied to have their names added to the voter list in Tamilnadu.

4) Prime Minister Narendra Modi is visiting Punjab today.

5) Sunetra Pawar has become the Deputy Chief Minister of Maharashtra.

6) The Meteorological Department has stated that there is a possibility of fog in 10 districts of Tamil Nadu today.

7) The price of gold has decreased by more than fifteen thousand rupees per sovereign in two days.

On this day in history…

1) Today is Coast Guard Day.

2) Today marks the day the Oxford English Dictionary was first published in 1884.

3) Today is the day Kalpana Chawla died in the Columbia space shuttle disaster in 2003.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (31.01.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (31.01.2026)

1) நவம்பர் 2025 இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Paper I & II) முடிவுகள் வெளியாயின.  

TET paper 1

தேர்வு எழுதியோர் : 91072

தேர்ச்சி பெற்றோர் : 44770(49.16%)

தேர்ச்சி பெறாதோர் : 46032(50.84%)

TET paper II

 Social Science

தேர்வு எழுதியோர் : 142861

தேர்ச்சி பெற்றோர் : 32554 ( 22.8 %)

தேர்ச்சி பெறாதோர் : 110307 ( 77.2 % )

TET paper II

கணக்கு மற்றும் அறிவியல்

தேர்வு எழுதியோர் : 186878

தேர்ச்சி பெற்றோர் : 71608 ( 38.3 %)

தேர்ச்சி பெறாதோர் : 115270( 61.7 % )

2) பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3) நாளை மத்திய நிதி அமைச்சர் 9 ஆவது முறையாகப் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அதிக முறை பட்ஜெட் செய்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க உள்ளார்.

4) தங்கத்தின் விலை சவரனுக்கு 7600 ரூபாய் குறைந்தது.

5) வெள்ளியின் விலை அதிரடியாக வீழ்ச்சி அடைந்து கிராம் 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Education & GK News

1) The results of the Teacher Eligibility Test (TET Paper I & II) held in November 2025 have been released.

TET Paper 1

Candidates appeared: 91072

Candidates passed: 44770 (49.16%)

Candidates failed: 46032 (50.84%)

TET Paper II

Social Science

Candidates appeared: 142861

Candidates passed: 32554 (22.8%)

Candidates failed: 110307 (77.2%)

TET Paper II

Mathematics and Science

Candidates appeared: 186878

Candidates passed: 71608 (38.3%)

Candidates failed: 115270 (61.7%)

2) The Supreme Court has ordered state governments to provide free sanitary napkins to school girls.

3) Tomorrow, the Union Finance Minister is set to present the budget for the 9th time, creating a historical record for presenting the budget the most number of times.

4) The price of gold decreased by Rs. 7600 per sovereign.

5) The price of silver has dropped drastically and is being sold at Rs. 320 per gram.

Thursday, 29 January 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.01.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.01.2026)

இன்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

1) சென்னையில் தமிழ்நாடு நாலெட்ஜ் சிட்டிக்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டினார்.

2) 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கான ஏடிஎம் இயந்திரங்கறை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

3) பொதுத்தேர்வு எழுதும் பார்வைச் சவால் கொண்ட மாணவர்களுக்கு ஸ்க்ரைபர் பணிகளுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

4) ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் ஜெமினி இலவச மாதிரித் தேர்வு பயிற்சிகளை வழங்குகிறது.

5) தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு பத்தாயிரம் ரூபாய் உயர்ந்தது.

6) ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக 134000 ரூபாயாக ஆனது.

7) வெள்ளியின் விலை ஒரு கிராம் 425 ரூபாயாக ஆனது.

Education & GK News

Today, Mahatma Gandhi's death anniversary is observed as Martyrs' Day.

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Tamil Nadu Knowledge City in Chennai.

2) The Central Government has decided to install ATM machines for 10, 20, 50, and 100 rupees notes.

3) College students and volunteers from the 'Illam Thedi Kalvi' program have been permitted to serve as scribes for visually challenged students appearing for public examinations.

4) Google's Gemini is offering free mock test training for students preparing for the JEE entrance exam.

5) The price of gold increased by ten thousand rupees per sovereign in a single day yesterday.

6) The price of one sovereign of gold reached an unprecedented high of Rs. 134,000.

7) The price of silver became Rs. 425 per gram.

Wednesday, 28 January 2026

TET தகுதி மதிப்பெண் 5% குறைப்பிற்கான அரசாணை

TET தகுதி மதிப்பெண் 5% குறைப்பிற்கான அரசாணை

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கான தகுதி மதிப்பெண் 50 சதவீதம் எனவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கான தகுதி மதிப்பெண் 40 சதவீதம் எனவும் முன்பிருந்த தகுதி மதிப்பெண் அளவிலிருந்து 5 சதவீதம் குறைக்கப்பட்டதற்கான அரசாணையைக் கீழே காண்க.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.01.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.01.2026)

1) மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸின் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார்.

2) நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

3) நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

4) கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்.

5) இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்தது. 93 சதவீத இந்தியப் பொருள்களுக்கு வரியில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

6) தைப்பூசம் நெருங்கி வருவதைத் தொடர்ந்து மல்லிகையின் விலை கிலோ நான்காயிரத்துக்கு உயர்ந்தது.




Education & GK News

1) Maharashtra Deputy Chief Minister and Nationalist Congress Party leader Ajit Pawar died in a plane crash.

2) The Parliament's Budget Session began today.

3) President Droupadi Murmu addressed the joint sitting of both Houses of Parliament.

4) Tamil Nadu Chief Minister M.K. Stalin will inaugurate the Keezhadi open-air museum the day after tomorrow.

5) A trade agreement between India and the European Union has been finalized. The European Union has announced that 93 percent of Indian goods will be tax-free.

6) With Thaipusam approaching, the price of jasmine has risen to four thousand rupees per kilogram.

Tuesday, 27 January 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.01.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.01.2026)

1) இந்தியாவிலேயே முதல் முறையாக இளம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி (HPV தடுப்பூசி) செலுத்தும் திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2) தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட 3,38,649 பெண்களுக்கு முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

3) தனியார் மருத்துவமனைகளில் HBV தடுப்பூசியை இருமுறை செலுத்த ரூ.28,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

4) சென்னையில் நடைபெற்ற உலகளாவிய பெண்கள் உச்சி மாநாட்டில், பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக TNWESafe (Tamil Nadu Women Employment and Safety) என்ற 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

5) அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கம் ஆண்டுத் தேர்வு வரை நீட்டிக்கப்படுகிறது.

6) பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் உரையுடன் தொடங்குகிறது.

7) ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து இருபதாயிரத்தைக் கடந்தது.

8) உலக அளவில் நுரையீரல் தொற்று பாதிப்புகள் இந்தியாவில் அதிகம் உள்ளது.

9) பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றில் இன்று…

1) பஞ்சாப் சிங்கம் எனப்படும் லாலா லஜபதி ராய் 1865 இல் பிறந்த தினம் இன்று.

2) இந்திய ராணுவத்தின் முதல் இந்தியத் தளபதியாக கரியப்பா 1949 இல் பதவியேற்ற தினம் இன்று.

3) பாரிஸ், ஈபிள் டவரின் கட்டுமானப் பணிகள் 1887 இல் தொடங்கப்பட்ட தினம் இன்று.

4) ஆல்பிரெட் நோபல் டைனமைட்டை 1867 இல் வெற்றிகரமாக வெடிக்கச் செய்து சோதனை செய்த நாள் இன்று.

5) இன்று கணினித் தரவு பாதுகாப்பு நாள்.


Education & GK News

1) For the first time in India, Tamil Nadu Chief Minister M.K. Stalin launched a program in Chennai to administer the Human Papillomavirus (HPV) vaccine to young girls.

2) In Tamil Nadu, 3,38,649 girls under the age of 14 will be given the HPV vaccine free of charge by the government.

3) It is noteworthy that administering the HPV vaccine twice costs Rs. 28,000 in private hospitals.

4) At the Global Women's Summit held in Chennai, Tamil Nadu Chief Minister M.K. Stalin launched TNWESafe (Tamil Nadu Women Employment and Safety), a Rs. 5,000 crore project aimed at improving women's employment and safety.

5) The skill development program in government schools is being extended until the annual examinations.

6) The Budget Session of Parliament begins today with an address by President Droupadi Murmu.

7) The price of one sovereign of gold has crossed one lakh twenty thousand rupees.

8) India has the highest number of lung infection cases globally.

9) Banking services have been severely affected due to the strike by public sector bank employees.

On this day in history…

1) Today is the birth anniversary of Lala Lajpat Rai, known as the Lion of Punjab, who was born in 1865.

2) Today is the day K.M. Cariappa assumed office as the first Indian Commander-in-Chief of the Indian Army in 1949.

3) Today is the day the construction of the Eiffel Tower in Paris began in 1887.

4) Today is the day Alfred Nobel successfully tested and detonated dynamite in 1867.

5) Today is Computer Data Security Day.

மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி - 2026 வினா விடைகள்

மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி - 2026

2026 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் திருக்குறள் வினாடி வினா போட்டியில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் அவற்றிற்கான விடைகளைக் கீழே காண்க.






Monday, 26 January 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (27.01.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (27.01.2026)

1) வளர்ந்த பாரதத்துக்கு மகளிர் பங்களிப்பு அவசியம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது குடியரசுத் தலைவர் உரையில் தெரிவித்துள்ளார்.

2) மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் சிலைகளைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

3) வாரத்தின் அனைத்து சனிக் கிழமைகளும் விடுமுறை வழங்கக் கோரி வங்கி ஊழியர்கள் இன்றிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

4) மூத்த தமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

5) தமிழகத்தில் 6 நாட்களுக்கு மித மழைக்கு வாய்ப்புள்ளது.

6) அமெரிக்காவில் வீசும் கடும் பனிப்புயலால் 13000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயலுக்கு 25 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

வரலாற்றில் இன்று…

1) 1756 இல் உலகப் புகழ்பெற்ற இசை மேதையான மோசார்ட் பிறந்த தினம் இன்று.

2) ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் எழுதிய லூயிஸ் கரோல் 1832 இல் பிறந்த தினம் இன்று.

3) இந்திய விண்வெளியின் தந்தையான விக்ரம் சாராபாய் 1971 இல் மறைந்த தினம் இன்று.




Education & GK News

1) President Droupadi Murmu stated in her presidential address that women's contribution is essential for a developed India.

2) The Tamil Nadu Chief Minister unveiled the statues of the language movement martyrs Thalamuthu and Natarajan.

3) Bank employees are set to go on strike from today, demanding that all Saturdays of the week be declared holidays.

4) Senior Tamil scholar T.Gnanasundaram passed away due to ill health. He was 84 years old.

5) There is a possibility of moderate rainfall in Tamil Nadu for 6 days.

6) 13,000 flights have been cancelled due to the severe snowstorm in the United States. Up to 25 people have died in the snowstorm.

On this day in history…

1) Today is the birthday of the world-renowned musical genius Mozart, who was born in 1756.

2) Today is the birthday of Lewis Carroll, who wrote Alice in Wonderland, born in 1832.

3) Today is the death anniversary of Vikram Sarabhai, the father of the Indian space program, who passed away in 1971.

Sunday, 25 January 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (26.01.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (26.01.2026)

1) 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றுகிறார்.

2) தமிழகத்தில் குடியரசு தனத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை, மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடி ஏற்றுகிறார்.

3) பள்ளிகளில் கூடுதல் கட்டணம் விதிப்பது தொடர்பாகப் புகார் அளிக்க பெற்றோர்கள் அஞ்சக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4) இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரியைத் திரும்ப பெற வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

5) அமெரிக்காவில் வீசும் மோசமான பனிப்புயலால் ஜார்ஜியா, மேரிலேண்ட் உட்பட 15 மாகாணங்களில் அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் 8 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6) டி20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணியை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது.

7) தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று 77 ஆவது குடியரசு தினம்

2) 1965 இல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்ட தினம் இன்று.

3) இன்று ஆஸ்திரேலிய தினம்

4) 1926 இல் முதல் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை ஜான் லோகி பெயர்ட்டு செய்த தினம் இன்று.


Education & GK News

1) On the occasion of the 77th Republic Day, President Droupadi Murmu is hoisting the national flag at Kartavya Path in New Delhi.

2) In Tamil Nadu, on the occasion of Republic Day, Tamil Nadu Governor R.N. Ravi is hoisting the national flag near the Labour Statue at Marina Beach in Chennai.

3) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has stated that parents should not hesitate to file complaints regarding schools charging exorbitant fees.

4) US Treasury Secretary Scott Bessent has indicated that there is a possibility of revoking the 25 percent additional tariff imposed by the US on India.

5) Due to the severe snowstorm sweeping across the US, a state of emergency has been declared in 15 states, including Georgia and Maryland. 80 million people have been affected by the snowstorm.

6) The Bangladesh team, which refused to come to India for the T20 World Cup, has been removed, and the Scotland team has been included in its place.

7) A rain warning has been issued for several districts of Tamil Nadu today.

On this day in history…

1) Today is the 77th Republic Day.

2) Today is the day in 1965 when Hindi was declared as the official and administrative language of India.

3) Today is Australia Day.

4) Today is the day in 1926 when John Logie Baird made the first live television broadcast.

Saturday, 24 January 2026

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 26.01.2026

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 26.01.2026

இன்று தேசிய வாக்காளர் தினம்.

1) துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

2) 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டுக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

3) இன்று தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

4) இவ்வாண்டிற்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல் உள்துறை அமைச்சகத்தால் இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளது.

5) இஸ்ரோவின் பிஎஸ்எல்வி – சி62 ஏவூர்தியின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

வரலாற்றில் இன்று…

1) முதல் குளிர்கால ஒலிம்பிக் 1924 இல் பிரான்சில் தொடங்கியது இன்று.

2) ராபர்ட் பாயில் 1627 இல் பிறந்த தினம் இன்று.

3) பிரபல எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான வெர்ஜீனியா உல்ப் 1882 இல் பிறந்த தினம் இன்று.

Today’s News

Today is National Voters' Day.

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has written a letter to the Prime Minister requesting an exemption from the NEET exam for paramedical courses.

2) On the occasion of the 77th Republic Day, President Droupadi Murmu will address the nation this evening.

3) Today, Language Martyrs' Day is being observed in Tamil Nadu.

4) The list of recipients of this year's Padma Awards is to be announced tonight by the Ministry of Home Affairs.

5) The final stages of work on ISRO's PSLV-C62 launch vehicle are underway.

Today in History…

1) The first Winter Olympics began in France on this day in 1924.

2) Today is the birth anniversary of Robert Boyle, who was born in 1627.

3) Today is the birth anniversary of the renowned writer and feminist Virginia Woolf, who was born in 1882.