தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) –
சாதக பாதகங்கள்
தமிழக
அரசு, நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்
சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத்
திட்டம்' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய திட்டத்தை 03.01.2026
(சனி) அன்று அறிவித்துள்ளது.
2003
ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் இருந்த பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தில் (CPS) இருந்த குறைகளைக் களைவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டம்
குறைகளைக் களைந்ததா? அதன் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?
இத்திட்டத்தின் சாதகங்கள் :
1) இத்திட்டத்தின்
மிகப்பெரிய பலமே, ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது அவர் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில்
(Last Drawn Basic Pay) சரியாக 50 சதவீதத் தொகையை வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாகப்
பெற முடியும்.
2) பழைய
ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே, பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு வழங்கப்படக்கூடிய அகவிலைப்படி
உயர்வு (DA) இந்தப் புதிய திட்டத்திலும் உண்டு.
3) ஓய்வூதியதாரர்
காலமானால், அவரது மனைவி அல்லது தகுதியுள்ள வாரிசுதாரர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில்
60 சதவீதத் தொகை 'குடும்ப ஓய்வூதியமாக' வழங்கப்படும்.
4) ஓய்வுபெறும்
போது வழங்கப்படும் பணிக்கொடை (Gratuity) உச்சவரம்பு 25 லட்ச ரூபாயாகக உயர்த்தப்பட்டுள்ளது.
இது ஊழியர்கள் ஓய்வுக்காலத்திற்குப் பின் ஒரு பெரிய தொகையை வழங்கும்.
5) ஊழியர்களின்
10% பங்களிப்பிற்கு இணையாக, அரசு தனது பங்களிப்பை 14% ஆக உயர்த்தியுள்ளது.
6) ஓய்வுக்குப்
பின் ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் பாதகங்கள்
1) பழைய
ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் எவ்விதப் பங்களிப்பும் செய்யத் தேவையில்லை. ஆனால்
TAPS திட்டத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகையை ஊழியர்கள்
வழங்க வேண்டும்.
2) அவ்வபோது
அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர்களுக்கு வழங்காமல், ஆறு மாதத்திற்கு ஒரு முறை கணக்கீடு
செய்யப்படுவதாக இத்திட்டம் கூறுகிறது.
3) இத்திட்டத்தைச்
செயல்படுத்தத் தொடங்கும்போதே அரசுக்கு 13,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில்
ஆண்டுக்கு 11,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். இதை மாநில அரசு சரியாகச்
சமாளிக்க வேண்டும். சமாளிக்குமா?
4) பெரும்பாலான
ஊழியர்கள் 10% பங்களிப்பு இல்லாத பழைய திட்டத்தையே (OPS) எதிர்பார்க்கின்றனர்.
TAPS திட்டம் என்பது OPS மற்றும் NPS ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஒரு சமரசத் திட்டமாகவே
உள்ளது.
5) ஊழியர்களிடமிருந்து
பிடிக்கப்படும் 10 சதவீத பங்களிப்புத் தொகை மீண்டும் உழியர்களுக்கு வழங்கப்படுமா என்பது
குறித்த தெளிவு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
6)
Old is gold என்பது போல இது இல்லை என்ற அதிருப்தி இருக்கவே செய்கிறது.
*****

No comments:
Post a Comment