கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.01.2026)
1) இந்தியாவிலேயே முதல் முறையாக இளம் பெண்களுக்கு கருப்பை வாய்
புற்றுநோய் தடுப்பூசி (HPV தடுப்பூசி) செலுத்தும் திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2) தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட 3,38,649 பெண்களுக்கு
முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
3) தனியார் மருத்துவமனைகளில் HBV தடுப்பூசியை இருமுறை செலுத்த
ரூ.28,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
4) சென்னையில் நடைபெற்ற உலகளாவிய பெண்கள் உச்சி மாநாட்டில்,
பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக TNWESafe (Tamil
Nadu Women Employment and Safety) என்ற 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைத்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5) அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கம் ஆண்டுத் தேர்வு வரை நீட்டிக்கப்படுகிறது.
6) பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத்
தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் உரையுடன் தொடங்குகிறது.
7) ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து இருபதாயிரத்தைக்
கடந்தது.
8) உலக அளவில் நுரையீரல் தொற்று பாதிப்புகள் இந்தியாவில் அதிகம்
உள்ளது.
9) பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிச்
சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில்
இன்று…
1) பஞ்சாப் சிங்கம் எனப்படும் லாலா லஜபதி ராய் 1865 இல் பிறந்த
தினம் இன்று.
2) இந்திய ராணுவத்தின் முதல் இந்தியத் தளபதியாக கரியப்பா
1949 இல் பதவியேற்ற தினம் இன்று.
3) பாரிஸ், ஈபிள் டவரின் கட்டுமானப் பணிகள் 1887 இல் தொடங்கப்பட்ட
தினம் இன்று.
4) ஆல்பிரெட் நோபல் டைனமைட்டை 1867 இல் வெற்றிகரமாக வெடிக்கச்
செய்து சோதனை செய்த நாள் இன்று.
5) இன்று கணினித் தரவு பாதுகாப்பு நாள்.
Education & GK News
1) For the first time in India, Tamil Nadu Chief
Minister M.K. Stalin launched a program in Chennai to administer the Human
Papillomavirus (HPV) vaccine to young girls.
2) In Tamil Nadu, 3,38,649 girls under the age of 14
will be given the HPV vaccine free of charge by the government.
3) It is noteworthy that administering the HPV vaccine
twice costs Rs. 28,000 in private hospitals.
4) At the Global Women's Summit held in Chennai, Tamil
Nadu Chief Minister M.K. Stalin launched TNWESafe (Tamil Nadu Women Employment
and Safety), a Rs. 5,000 crore project aimed at improving women's employment
and safety.
5) The skill development program in government schools
is being extended until the annual examinations.
6) The Budget Session of Parliament begins today with an
address by President Droupadi Murmu.
7) The price of one sovereign of gold has crossed one
lakh twenty thousand rupees.
8) India has the highest number of lung infection cases
globally.
9) Banking services have been severely affected due to
the strike by public sector bank employees.
On this
day in history…
1) Today is the birth anniversary of Lala Lajpat Rai,
known as the Lion of Punjab, who was born in 1865.
2) Today is the day K.M. Cariappa assumed office as the
first Indian Commander-in-Chief of the Indian Army in 1949.
3) Today is the day the construction of the Eiffel Tower
in Paris began in 1887.
4) Today is the day Alfred Nobel successfully tested and
detonated dynamite in 1867.
5) Today is Computer Data Security Day.



No comments:
Post a Comment