Friday, 9 January 2026

வருமான வரி நிவாரணம் குறித்த தெளிவுகள் (IT Marginal Relief)

வருமான வரி நிவாரணம் குறித்த தெளிவுகள் (IT Marginal Relief)

 2025 – 2026 ஆம் நிதியாண்டில் அமலாகும் புதிய வரி விதிப்பு முறையில் (New Tax Regime) வருமான வரி நிவாரணம் குளித்த தெளிவுகள் (Income tax Marginal Relief  clarification) பற்றி இங்கே காண்போம்.

புதிய வரிவிதிப்பு முறையில் 12 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் வரை வரி கிடையாது. ஆண்டு வருமானம் 12 லட்ச ரூபாயை விட சிறிதளது அதிகரிக்கும் போது ஈட்டிய கூடுதல் வருமானத்தை விடச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கக் கூடாது என்பதற்காக வருமான வரி நிவாரணம் (IT Marginal Relief) வழங்கப்படுகிறது. அவ்வகையில் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief) எவ்வாறு அமைகிறது என்பதை அறிந்து கொள்வது வருமான வரி செலுத்துவோருக்கு உபயோகமானதாக அமையும்.

12,70,580 ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தும். ஆனால், அதிகபட்ச ஆண்டுவருமானம்: 12,70,590 ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருந்தால் இந்த விளிம்புநிலை நிவாரணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த கணக்கீட்டு விவரங்களைக் கீழே விரிவாகக் காண்போம்.

1) 12,00,100 ரூபாய் ஆண்டு வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வரி 100 ரூபாய் மட்டுமே. இதன் மூலமாக 59,915 ரூபாய் வரி நிவாரணம் கிடைக்கிறது.

2) 12,01,000 ரூபாய் வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வரி 1,000 ரூபாய் மட்டுமே. இதன் மூலமாக 59,150 ரூபாய் வரி நிவாரணம் கிடைக்கிறது.

3) 12,10,000 ரூபாய் ஆண்டு வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி 10,000 ரூபாய் மட்டுமே. இதன் மூலமாக 51,500 ரூபாய் வரி நிவாரணம் கிடைக்கிறது.

4) 12,50,000 ரூபாய் ஆண்டு வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி 50,000 ரூபாய் மட்டுமே. இதன் மூலமாக 17,500 ரூபாய் வரி நிவாரணம் கிடைக்கிறது.

5) 12,70,000 ரூபாய் ஆண்டு வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி 70,000 ரூபாய் மட்டுமே. இதன் மூலமாக 500 ரூவாய் வரி நிவாரணம் கிடைக்கிறது.

6) 12,70,500 ரூபாய் ஆண்டு வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி 70,500 ரூபாய் மட்டுமே. இதன் மூலமாக 75 ரூபாய் வரி நிவாரணம் கிடைக்கிறது.

7) 12,70,580 ரூபாய் ஆண்டு வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி 70,580 ரூபாய் மட்டுமே. இதன் மூலமாக 7 ரூபாய் நிவாரணம் கிடைக்கிறது.

இவ்வரி நிவாரணம் குறித்துச் சுருக்கமாகக் கூறுமிடத்து, ஆண்டு வருமானம் 12 லட்ச ரூபாய்க்கு மேல் செல்லும் போது, கூடுதல் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்த இந்த விளிம்புநிலை நிவாரணம் வழிவகை செய்கிறது. உதாரணமாக 12 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் 100 அதிகரித்தால் 100 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இவ்விதமாக இவ்வரி நிவாரணத்தை 12,70,580 ரூபாய் வரை பெறலாம்.

*****

No comments:

Post a Comment