பருவநிலை மாற்றம் என்ன செய்யும் தெரியுமா?
வெள்ளை நிறம் மறைந்து
நீலம் உயர்கிறது
நாமோ இன்னும்
குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து
பூமியின் வியர்வையை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
அண்டார்டிகாவை
உலகின் மிகப்பெரிய குளிர்சாதனப் பெட்டியாகச் சொல்லலாம். அதற்குள் ஏகப்பட்ட பனிப்பாறைகள்,
கொஞ்சம் பெங்குவின்கள், கொஞ்சம் சீல்கள், கொஞ்சம் திமிங்கிலங்கள் உள்ளன. முக்கியமான
செய்தி என்னவென்றால், இங்கிருப்பது போல, அங்கே கொசுக்கள் கிடையாது. ஐஸ்லாந்துக்கும்
அந்தப் பெருமை இருந்தது. அண்டார்டிகா பனிப் பாலைவனம் என்றால், ஐஸ்லாந்து ஒரு பனிவனம்.
இப்போது
விசயம் என்னவென்றால், ஐஸ்லாந்தில் கொசுக்கள் குடியேறிவிட்டன. கொரோனா வைரஸ் போல சமர்த்தாக
நுழைந்துவிட்டன பருவநிலை மாற்றத்தின் அறிகுறி காட்டும் கொசுக்கள்.
விளைவு?
அய்யோ பாவம்! ஐஸ்லாந்து தனது தனித்த அடையாளத்தைத் தொலைத்துவிட்டது. அண்டார்டிகாவுக்கும்
இதே நேரலாம். பனி உருகுவது என்பது வெறும் கடல்
மட்டம் உயர்வது மட்டுமல்ல; அது கொசுக்களின் பெருக்கம், பூச்சிகளின் விருத்தி என்று
எல்லாவற்றையும் தாறுமாறாகப் புரட்டிப் போடக் கூடியது. போகிறப் போக்கைப் பார்த்தால்
பாலிதீன் பைகளில் பொருட்கள் வாங்கும் மனிதன் விரைவில், அதே பாலிதீன் பையில் ஆக்சிஜன்
வாங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அண்டார்டிகாவில் நாளை ஒரு கொசு கடித்தால் ஆச்சரியப்படாதீர்கள்.
இயற்கையை மாற்றி எழுதுகிறான் மனிதன். இயற்கை ஒரு வடிவமைப்பாளர் என்றால், மனிதன் அதை
அழிக்கும் அழிரப்பர்.
மொத்தத்தில்,
பருவநிலை மாற்றம் என்னவெல்லாம் செய்யும்?
பருவநிலை
மாற்றம் அண்டார்டிக்காவில் பனியை உருகச் செய்யும். அண்டார்டிக்காவிற்கு உள்ள சிறப்பு
அது பனிக்கண்டம், பனிப் பாலைவனம் என்பதைத் தாண்டி அது கொசுக்களே இல்லாத கண்டம் என்பதும்தான்.
அப்படி
ஒரு சிறப்பு ஐஸ்லாந்துக்கும் இருந்தது. ஆனால் அந்தச் சிறப்பை ஐஸ்லாந்து இழந்து விட்டது.
ஐஸ்லாந்தில் கொசுக்கள் உருவாகி விட்டன. அதற்குக் காரணம் இந்த பருவநிலை மாற்றம்தான்.
*****

No comments:
Post a Comment