அலுவலகக் கடிதங்களின் சுருக்கங்களின்
விளக்கம்
அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண், மூ.மு.எண்
என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
அதன் விளக்கம்
:
ந. க. எண்
|
நடப்புக் கடித
எண்
|
ஓ. மு. எண்
|
ஓராண்டு முடிவு
எண்
|
மூ. மு. எண்
|
மூன்றாண்டு முடிவு
எண்
|
நி. மு. எண்
|
நிரந்தர முடிவு
எண்
|
ப. மு. எண்
|
பத்தாண்டு முடிவு
எண்
|
தொ. மு. எண்
|
தொகுப்பு முடிவு
எண்
|
ப. வெ. எண்
|
பருவ வெளியீடு எண்
|
நே. மு. எண்
|
நேர்முகக் கடித
எண்
|
மேற்கண்ட சுருக்கங்களில் ந.க.எண்
(நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் உள்ளது ஆகும்.
நேர்முகக் கடிதம் என்பது கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும்
கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட
அலுவலர் விரைந்து அளிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு சுருக்கம் மற்றும் சுருக்க எண், நாள் இல்லாது வரும் கடிதங்களை
அதிகாரப்பூர்வ கடிதங்களாக கருத இயலாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
No comments:
Post a Comment