2520 என்ற எண்ணின் சிறப்புகள்
2520
என்ற இந்த எண்ணின் சிறப்பைப் பற்றி முகநூலிலும், புலனத்திலும் தொடர்ந்து பகிரப்பட்ட
செய்திகள் மூலமாக அறிந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
2520
என்ற இந்த எண்ணை 1 முதல் 10 வரை எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்கலாம். அதை நீங்களே
பாருங்களேன்.
2520 ÷ 1 = 2520
2520 ÷ 2 = 1260
2520 ÷ 3 = 840
2520 ÷ 4 = 630
2520 ÷ 5 = 504
2520 ÷ 6 = 420
2520 ÷ 7 = 360
2520 ÷ 8 = 315
2520 ÷ 9 = 280
2520 ÷ 10 = 252
2520
என்ற இந்த எண்ணை 7×30×12 எனப் பெருக்கற்பலனாக எழுதலாம்.
இதில்
7 என்பது வாரத்தின் 7 நாட்களையும்
30 என்பது
மாதத்தின் 30 நாட்களையும்
12 என்பது
வருடத்தின் 12 மாதங்களையும் குறிப்பதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டறிந்தது இராமானுஜம் என்றும் அந்தத் தகவல் குறிப்பிடுகிறது.
*****
No comments:
Post a Comment