Saturday 26 November 2022

நீங்களே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம்!

நீங்களே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம்!

உங்களது கைபேசியைப் பயன்படுத்தி நீங்களே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம்.

மின் இணைப்பு எண்ணையும் அதனுடன் இணைக்க வேண்டிய தயார் எண்ணையும் தயாராக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது அவ்விரு அட்டைகளையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆதார் அட்டையைப் புகைப்படம் எடுத்து அதை 500KB அளவிற்குள் உங்கள் கைபேசி Gallery இல் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது அதை நீங்கள் PDF ஆகவும் 500KB க்குள் தயாராக வைத்திருக்கலாம்.

இதைத் தொடர்ந்து கீழே உள்ள இரு வகை இணைப்புகளில் ஏதேனும் ஒன்றைச் சொடுக்கி ஆதார் எண்ணை இணைப்பதற்கான மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.

www.tangedco.gov.in

அல்லது

https://adhar:tnebltd.org/adharupload/

இணைய தளத்திற்குச் சென்றதும் முதலில் மின் இணைப்பு எண்ணையும், அதன் பின்பு கைபேசி எண்ணையும் பதிவிடுங்கள்.

அதைத் தொடர்ந்து உங்கள் கைபேசிக்கு வந்திருக்கும் OTP NUMBER ஐப் பதிவிடுங்கள்.

அதைத் தொடர்ந்து வெளிப்படும் இணையதள பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தோன்றும்.

அதில் இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரம் கேட்கப்பட்டிருக்கும்.

சரியான  விவரத்தைக் கொடுத்து, ஆதார் எண்களை இடைவெளி இல்லாமல் பதிவு செய்யுங்கள்.

பின்னர், ஆதார் எண் அட்டையில் உள்ளவாறுப் பெயரைப் பதிவிடுங்கள்.

அதைத் தொடர்ந்து Gallery இல் தயாராக வைத்திருக்கும் 500 KB க்கு குறைவான JPEG ஆதார் எண் புகைப்படத்தையோ அல்லது PDF Formatனையோ பதிவேற்றம் செய்யுங்கள்.

அடுத்ததாகக் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து SUBMIT செய்யுங்கள்.

அதன்பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற பதில் கிடைக்கப் பெறும்.

இப்போது நீங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை முடித்து விட்டீர்கள்.

வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில்தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் எளிதாக ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ளலாம்.

இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

No comments:

Post a Comment